குறைந்த வருமானக் குடும்பங்கள் இனி குடியிருப்பு வட்டாரங்களிலேயே சட்ட சேவைகளை இலவசமாகப் பெறக்கூடும்.
அத்தகைய சூழலுக்கு வழிவிடக்கூடிய முதல் சட்ட சமூக நிலையம் ஹவ்காங்கில் அமைக்கப்படவுள்ளது.
டியென் டி ஆலயத்தில் அமையவிருக்கும் அந்நிலையம் இவ்வாண்டு இறுதியில் திறக்கப்படும்.
டியென் டி ஆலயம், வழக்கறிஞர்கள் சங்கத்தின் 'எல்எஸ்பிபிஎஸ்' எனும் இலவச சட்ட சேவைப் பிரிவு, சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம், ஆர்எஸ்எஸ் அறநிறுவனம் ஆகியவற்றுக்கிடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின்கீழ் சட்ட சமூக நிலையம் அமைக்கப்படுகிறது.
ஆர். எஸ். சோலமன் சட்ட நிறுவனம் ஆர்எஸ்எஸ் அறநிறுவனத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த முயற்சிக்கு நிதி திரட்டி உதவுவது அறநிறுவனத்தின் இலக்கு.
குடியிருப்பு வட்டாரங்களில் மேலும் இத்தகைய சட்ட நிலையங்களை அமைக்கும் எண்ணம் கொண்டுள்ளதாக 'புரோ போனோ எஸ்ஜி' என்று இவ்வாண்டு இறுதியில் பெயர் மாற்றம் காணவுள்ள 'எல்எஸ்பிபிஎஸ்' அமைப்பின் தலைவர் கிரெகரி விஜயேநே்திரனும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி டேங்குய் லிம்மும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் தெரிவித்தனர்.

