'பிகேஇ' எனும் புக்கிட் திமா விரைவுச்சாலையில் விபத்தில் சிக்கிய அரிய வகை மான் ஒன்று கொல்லப்பட்டது.
இச்சம்பவம் வியாழக்கிழமையன்று (25 ஆகஸ்ட்) நிகழ்ந்தது.
'சம்பர் டியர்' என்றழைக்கப்படும் இந்த அரிய வகை மான் நினைவிழந்த நிலையில் படுத்திக்கிடப்பது பதிவான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன.

