முதன்முறை வீடு வாங்கும் குடும்பத்துக்கு வாய்ப்பு

முதன்முறை வீடு வாங்கும் குடும்பத்துக்கு வாய்ப்பு

3 mins read
15f21768-aed5-4e27-b620-4068eeab8b3d
-

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீட்டுக்கு முதன்­த­ட­வை­யாக விண்­ணப்­பிப்­போர் முதிர்ச்சி அடை­யாத குடி­யி­ருப்­புப் பேட்டை­களில் பிடிஓ வீட்­டைப் பெறு­வ­தற்­கான வாய்ப்பு அதி­க­மாகி உள்ளது.

நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை விற்­பனைக்கு வரும் வீடு­களில் தொடங்கி அவர்­கள் இந்த வாய்ப்­பைப் பெற­லாம்.

அத்­த­கைய பேட்­டை­க­யில் கட்­டப்­படும் நாலறை, அதற்­கும் பெரிய வீடு­களில் குறைந்­த­பட்­சம் 95% வீடுகள், முதல் முறை வீட்டுக்கு விண்­ணப்­பிக்­கும் குடும்­பங்­களுக்கு ஒதுக்­கப்­படும். இந்த அளவு இப்­போது 85% ஆக இருக்­கிறது.

தேசிய வள­ரச்சி அமைச்­சும் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­க­மும் நேற்று இந்த விவரங்­களை அறி­வித்­தன. முதல் முறை விண்­ணப்­பிப்­போ­ருக்கு முதிர்ச்­சி­பெ­றாத பேட்டைகளில் ஒதுக்­கப்­படும் மூவறை வீடு­க­ளின் அளவு வரம்­பும் குறைந்த பட்­சம் 85% ஆகும். இந்த வரம்பு இப்­போது 70% ஆக இருக்­கிறது.

முதிர்ச்சி அடைந்த பேட்­டை­களில் பிடிஓ வீடு­களை ஒதுக்குவதற்­கான அளவு வரம்­பில் மாற்­றம் இராது. இத்­த­கைய பேட்­டை­களில் விற்­ப­னைக்­குக் கொடுக்­கப்­படும் வீடு­களில் குறைந்தபட்­சம் 95% வீடு­கள் முதல் முறை விண்­ணப்­பிப்­போருக்­காக ஒதுக்­கப்­ப­டு­கின்­றன. முதிர்ச்சி அடை­யாத பேட்­டை­களில் முதி­யோ­ருக்கு அல்­லாத 'ஃபிளெக்சி' எனப்படும் ஈரறை நீக்­குப்­போக்கு வீடு­களில் 65% யிலானவை முதல் முறை மனுச் செய்­யும் ஒற்­றை­யருக்கு ஒதுக்­கப்­படும். இந்த விகி­தம் இப்­போது 50% ஆக இருக்­கிறது.

பிடிஓ வீடு கேட்டு விண்­ணப்­பிப்போரில் முதல்­முறை வீட்­டுக்கு மனுச்­செய்­வோரே அதி­கம்.

ஆகை­யால் இந்­தப் பிரி­வி­னர் முதன்­மு­த­லாக ஒரு வீட்­டைப் பெறு­வ­தற்­கான வாய்ப்பை உறு­திப்

­ப­டுத்­து­வ­தற்­கா­கவே இந்த அளவு வரம்­பு­கள் மாற்றி சரி­செய்யப்­ப­டு­வ­தாக அமைச்­சும் கழ­க­மும் கூறின. ஆறு பேட்­டை­களில் ஏறக்­குறைய 4,900 ஏழு பிடிஓ திட்ட வீடு­களை கழகம் செவ்வாய்க்கிழமை விற்­ப­னைக்­குக் கொடுக்­கிறது.

அந்த வீடு­கள் சுவா சூ காங், ஜூரோங் ஈஸ்ட், உட்­லண்ட்ஸ் ஆகிய முதிர்ச்சி அடை­யாத பேட்­டை­க­ளி­லும் கட்­டப்­படும். அங் மோ கியோ, புக்­கிட் மேரா, தெம்­ப­னிஸ் ஆகிய முதிர்ச்சி அடைந்த பேட்­டை­களில் எஞ்­சிய வீடு­கள் கட்­டப்­படும். பிடிஓ வீடு கேட்டு விண்­ணப்­பிப்­போ­ரில் முதல்­முறை வீட்டுக்கு மனுச் செய்­வோரே அதி­கம். இவர்­கள் எண்­ணிக்கை 2018ல் 19,000க்கும் அதி­க­மாக இருந்­தது. இது சென்ற ஆண்டு ஏறத்­தாழ 34,000 ஆகி­யது. அதா­வது 2021ல் ஒரு பிடிஓ வீட்டுக்கு கிட்­டத்­தட்ட 4.1 விண்­ணப்­­பங்­கள் வந்­தன.

இந்த அளவு 2018ல் 2.2 ஆக இருந்­தது. முதிர்ச்சி அடை­யாத பேட்­டை­களில் கட்­டப்­படும் ஈரறை நீக்­குப்­போக்கு வீடு கேட்டு முதல் முறை­யாக வீட்­டுக்கு விண்­ணப்­பிக்­கும் ஒற்­றை­யர்­களும் அதி­க­மாகி வரு­கி­றார்­கள். சென்ற ஆண்­டில் ஒரு வீட்­டுக்கு இத்­த­கைய 7.1 விண்­ணப்­பங்­கள் வந்­தன. இந்த அளவு 2020ல் 5.1 ஆக இருந்­தது.

வீடு வாங்க முதல் முறை­யாக அல்லது இரண்­டா­வது முறை­யாக விண்­ணப்­பிப்­போ­ரின் அள­வைப் பொறுத்து கழ­கம் ஏற்­கெ­னவே பிடிஓ வீடு ஒதுக்­கீட்டு வரம்பை திருத்தி இருக்­கிறது.

அந்த அணு­கு­மு­றை­யைப் போலவே இப்­போ­தும் அது செயல்­ப­டு­கிறது. முதிர்ச்சி ­அடை­யாத பேட்­டை­களில் இரண்­டா­வது முறை­யாக வீடு கேட்டு விண்­ணப்­பிப்­போ­ருக்­கான அளவு வரம்பு 2012 மார்ச்­சில் உயர்த்­தப்­பட்­டது.

2009 நவம்­ப­ரில் வீடு­க­ளுக்கு அதிக தேவை நில­வி­ய­போது முதல்­முறை வீடு கேட்டு விண்­ணப்­பித்­தோ­ருக்கு கழ­கம் சில சரி­யாக்­கங்­க­ளைச் செய்­தது.

முதிர்ச்சி அடை­யாத பேட்­டை­களில் கட்­டப்­படும் வீடு­க­ளுக்கு விண்­ணப்­பித்து அழைக்­கப்­ப­டும்­போது முன்பதிவு செய்து அதன் மூலம் பிடிஓ வீட்டை உறு­திப்­படுத்­திக்­கொள்­ளும்­படி வீடு வாங்­கு­வோருக்கு அமைச்­சும் கழ­க­மும் ஆலோ­சனை கூறி உள்ளன.