மனநோயாளிகளைப் பராமரிப்பவர்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட 1,000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்தனர்.
$145,000 நிதி திரட்ட இவர்கள் 100 கிலோமீட்டர் தூர நடைப்பயிற்சி யில் நேற்று காலை ஈடுபட்டனர்.
இந்த நடைப்பயிற்சி நேற்று காலை 7 மணிக்கு சிங்கப்பூர் விளையாட்டு மையத்தின் 100பிளஸ் புரோமினாட்டில் தொடங்கியது. நிதி திரட்ட நடத்தப்படும் நடை
பயிற்சிகள் இன்றும் நடைபெறும்.
பீஷான், ஈசூன், பொங்கோல், தெம்பனிஸ் உட்பட சிங்கப்பூரின் மத்திய, வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இந்த 20 கிலோமீட்டர், 50 கிலோமீட்டர், 100 கிலோமீட்டர் நடைபயிற்சிப் பாதைகள் அமைந்துள்ளன. பதிவுக் கட்டணங்கள், ரொக்க நன்கொடைகள் மூலம் கிடைக்கும் தொகை பராமரிப்பாளர்கள் கூட்டணி அமைப்பிடம் வழங்கப்படும்.
இந்த அமைப்பு மனநோயாளிகளைப் பராமரிப்பவர்களுக்கு உதவி செய்யும் லாப நோக்கமற்ற அமைப்பாகும்.

