சுற்றுச்சூழல் மாறாமல் உருவாகும் கிளமெண்டி இயற்கை பாதை

சுற்றுச்சூழல் மாறாமல் உருவாகும் கிளமெண்டி இயற்கை பாதை

2 mins read
1865262c-b36b-496b-9746-1db517f3d857
மக்களோடு ஒன்றிபோன கிளமெண்டி வனப்பகுதியில் உள்ள ஓடையின் சூழலை பாதிக்காத வகையில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கிள­மெண்டி வனப்­ப­கு­திக்­குள் அமை­ய­வி­ருக்­கும் இரண்டு கிலோ மீட்­டர் நீள இயற்கை பாதை­யின் அடுத்தகட்ட மேம்­பாட்­டுப் பணி­கள் உணர்­வு­பூர்வ ஓடை வழி­யாக இடம்­பெ­று­கிறது.

அந்­தப்­பாதை நீழ்­வாழ் உயி­ரி­னங்­கள், உல­கில் அருகி வரும் ஸ்ட்ரா-ஹெட்­டட் புல்­புல் குருவி போன்­ற­வற்­றுக்கு இருப்­பி­ட­மாக இருந்து வரு­கிறது.

பொழு­து­போக்­குப் பாதை­யாக இருந்­தா­லும் அங்­குள்ள சுற்­றுச்­சூ­ழ­லுக்கு ஏற்­படும் பாதிப்­பு­க­ளைக் குறைப்­ப­தற்­காக பொது­மக்­க­ளை­யும் சுற்­றுச்­சூ­ழல் ஆலோ­சகர்­க­ளை­யும் தேசிய பூங்­காக் கழ­கம் உதவி கேட்­டுள்­ளது.

இவ்­வா­ரம் மாணவ தொண்­டூழி­யர்­கள் உட்­பட பொது­மக்­கள் இதன் தொடர்­பில் ஆய்­வு­களை மேற் கொள்­ள­வி­ருக்­கின்­ற­னர்.

ஆய்­வில் கிள­மெண்டி வனப் பகுதி ஓடை­யோ­ரம் உள்ள தாவ ரங்­கள், உயி­ரி­னங்­கள் பற்­றிய விவ­ரங்­கள் சேக­ரித்து பதிவு செய்­யப்­படும்.

'குடி­மக்­கள் அறி­வி­யல் அறி­ஞர்­கள்' திரட்­டும் இத்­த­கைய தர­வு­க­ளைக் கொண்டு ஓடை­யோ­ர­மாக தாவ­ரம், நீர்­வாழ் உயி­ரி­னங்­க­ளுக்கு ஏற்ப சூழல் மேம்­ப­டுத்­தப்­படும் என்று தேசிய பூங்­காக் கழ­கம் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

பல்­லு­யிர் ஆய்­வு­கள் பின்னர் சுற்­றுச் சூழல் ஆலோ­ச­கர்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­படும்.

அவர்­கள், நீரோ­டைக்கு அரு­கில் மேற்­கொள்­ளப்­படும் மேம்­பாட்­டுப் பணி­கள் தாவர, விலங்கு களுக்கு ஏற்­ப­டுத்­தும் பாதிப்­பு­கள் குறித்து மதிப்­பி­டு­வார்­கள்.

இதை­ய­டுத்து தாக்­கத்தை குறைக்­கும் உத்­தி­களை அவர்­கள் வகுப்பார்கள்.

இரண்­டாம் கட்ட மேம்­பாட்­டுப் பணி­கள் தொடங்­கு­வ­தற்கு முன்பு சுற்­றுச்­சூ­ழல் பாதிப்பு குறித்து மதிப்­பீடு செய்­தாக வேண்­டும் என்று தேசிய பூங்­காக் கழ­கம் தெரி­வித்­தது. புக்­கிட் தீமா­வின் முதல் திருப்பிவிடப்­பட்ட கால்­வாய் வழி­யாக ஓடை­யை­யும் உள்­ள­டக்­கிய 800 மீட்­டர் நீள­முள்ள பகுதி மதிப்­பீ­டு­களில் அடங்­கும்.

கடந்த ஆண்டு கிள­மெண்டி வனப்­ப­குதி வழி­யாக இரண்டு இயற்­கைப் பாதை­கள் உரு­வாக்­கப்­படும் என்று தேசிய பூங்­காக் கழ­கம் அறி­வித்­தி­ருந்­தது.

அதில் ஒன்று, இரண்டு கிலோ மீட்­டர் நீள­முள்ள கிள­மெண்டி இயற்கை பாதை­யா­கும்.

இதற்கிடையே அடுத்த ஆண்டி லிருந்து மேம்பாட்டுப் பணிகளின் போது தாவரம், வனவிலங்குகளை பாதிக்கும் அம்சங்களை மதிப்பிடும் சுற்றுச்சூழல் ஆலோசகர் தொடர் பான விவகாரங்களை மேம்பாட் டாளர்களுக்குப் பதிலாக தேசிய பூங்காக் கழகமே கையாளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, சுற்றுச்சூழல் பாதிப்பின் மதிப்பீடுகளை ஒருங்கிணைக்க உதவும்.