கோபிநாத் பிள்ளையின் நினைவலைகள் வெளியீடு

கோபிநாத் பிள்ளையின் நினைவலைகள் வெளியீடு

2 mins read
a41567ff-a7a7-4b2a-a356-9102c1132417
நூல் வெளியீட்டு விழாவில் மகிழ்ச்சியான தருணத்தைக் காட்டும் இப்படத்தில் (இடமிருந்து) நூலின் இணை ஆசிரியர் ஜான் வேடெர், திரு கோபிநாத் பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர், மகள்கள் பிரீத்தா, பிரியா (வலதுகோடி), ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங், திருமதி ஷியாமளா பிள்ளை ஆகியோர் உள்ளனர். படம்: ஐஎஸ்ஏஎஸ் -

எல்லாவிதமான வர்த்தகங்களிலும் கைதேர்ந்தவரான சிங்கப்பூரின் முன்னாள் தூதர் கோபிநாத் பிள்ளையின் நினைவுகள் அடங்கிய நூல் நேற்று வெளியிடப்பட்டது.

சிங்கப்பூர் ஒரு நாடாக முன் னேறிய காலத்தில் அவரது பங்கை யும் போராட்டங்களையும் சாதனை களையும் நூல் விளக்குகிறது.

நூலுக்கு 'More Than the Eye Can See' என்று தலைப்பு இடப் பட்­டுள்­ளது. ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் நேற்று தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் பல்­க­லைக்கழக கலா­சார நிலை­யத்­தில் நடைபெற்ற எளி­மை­யான நிகழ்ச்­சி­யில் அந்த நூலை வெளி­யிட்டு கோபிநாத் பிள்­ளையை பெரு­மைப்­ப­டுத்தினார். நிகழ்­வில் சிற்­று­ரை­யாற்­றிய முன்­னாள் பிர­த­ம­ரான கோ சோக் டோங், சிங்­கப்­பூ­ருக்கு குறிப்­பி­டத்தக்க பங்­கை­யாற்­றி­யுள்ள திரு பிள்­ளையை முன்­னோ­டித் தலை­மு­றை­யின் சிறந்த உறுப்­பி­னர் என்று பாராட்­டி­னார்.

"திரு பிள்­ளை­யின் வாழ்க்கை சிங்­கப்­பூர் வர­லாற்­றின் முக்­கிய அங்­க­மா­கும். கற்­றல், உறுதி, சாதனை, பங்­க­ளிப்பு ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கிய குறிப்­பி­டத்­தக்க பய­ணம்," என்று திரு கோ வரு­ணித்­தார். என்யுஎஸ் தெற்­கா­சிய ஆய்வுக் கழ­கம் (ISAS) நூல் வெளி­யிட்­டுக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

இந்த ஆய்­வுக் கழ­கத்தை நிறு­விய முதல் தலை­வர் திரு பிள்ளை. கடந்த ஆண்டு வரை 17 ஆண்­டு­கள் அவர் இப்­ப­த­வி­யில் நீடித்­தார்.

தற்­போது தெற்­கா­சிய ஆய்­வுக்கு முன்­னோ­டி­யாக இருக்­கும் சிந்­த­னைக் குழு­வுக்கு அவர் ஆலோச கராக உள்­ளார். இந்­திய மர­பு­டைமை நிலைய ஆலோ­சனை சபை­யின் முன்­னாள் தலை­வரு­மான 84 வயது கோபி­நாத் பிள்­ளைக்கு, சிங்­கப்­பூ­ரின் தலை­சி­றந்த தேசிய விரு­து­களில் ஒன்­றான 'மதிப்­பிற்­கு­ரிய சேவை விருது' இவ்­வாண்டு வழங்­கிச் சிறப்­பிக்­கப்­பட்­டது.