ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா கடலில் மூழ்கியவர் என நம்பப்படும் ஆடவரின் உடல் நேற்று காலை (ஆகஸ்ட் 27) கண்டுபிடிக்கப்பட்டது. 920 ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் கார் நிறுத்துமிடம் சி1 அருகே காலை 7 மணிக்கு உதவி கேட்டு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு அழைப்பு வந்துள்ளது. இது ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா அணைக்கரைக்கு அருகே உள்ள பார்க்லேன் கிரீன் பகுதி. குடிமைத் தற்காப்பு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தபோது அங்கு ஓர் உடல் நீரி மிதந்துகொண்டிருந்தது என்றும் அதிகாரிகள் அதை மீட்டு கரைக்குக்கொண்டு வந்தனர் என்றும் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. சம்பவ இடத்திலேயே ஆடவர் மரணம் அடைந்துவிட்டார் என அறிவிக்கப்பட்டது. நீரில் மூழ்கி அந்த ஆடவர் மரணம் அடைந்துவிட்டதாக காவல் துறையினர் இந்த வழக்கை வகைப்படுத்தியுள்ளனர். இதில் சட்டத்துக்குப் புறம்பான, சந்தேகத்துக்குரிய நடவடிக்கை எதுவும் இடம்பெற்றதாக காவல் துறையினர் நம்பவில்லை.
ஈஸ்ட் கோஸ்ட் கடலில் மூழ்கியவர் என நம்பப்படும் ஆடவரின் உடல் கண்டுபிடுப்பு
1 mins read
கோப்புப்படம்: ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா -

