பேருந்துகளில் பயணம் மட்டும்தானா? இனி அதில் தங்கவும் முடியும்

பேருந்துகளில் பயணம் மட்டும்தானா? இனி அதில் தங்கவும் முடியும்

1 mins read
5e725f63-a69d-4a77-a1ee-91e1ced43433
பேருந்துகளால் அமைக்கப்பட்ட சொகுசு தங்கும் விடுதிகளின் மாதிரி. படம்:WTS Travel -

பேருந்துகளில் பயணம் செய்யும்போது குறிப்பாக நீண்ட தூரம் பயணிக்கும்போது சிறிய குட்டித்தூக்கம் போடுவது சிலருக்குப் பிடிக்கும். சிலருக்கு நீண்ட தூரப் பேருந்து பயணங்கள் பிடிக்கும்.

ஆனால் பேருந்தில் படுத்து உறங்கினால் எப்படி இருக்கும் என்று எண்ணுவோர் இனி அதை செய்தும் பார்க்கலாம்.

பழைய பேருந்துகளைக் கொண்டு அமைக்கப்படவுள்ள புதிய சொகுசு தங்கும் விடுதியில் இது சாத்தியமாகும்.

வரும் 2023ஆம் ஆண்டுக்குள் சாங்கி வில்லேஜில் கட்டப்படவுள்ள புதிய தங்கும் விடுதியில் கிட்டத்தட்ட 20 பழைய பேருந்துகள் ஹோட்டல் அறைகளாகப் பயன்படுத்தப்படவுள்ளன.

WTS டிராவல் நிறுவனத்தால் அமைக்கப்படவுள்ள இந்த தங்கும் விடுதி 8,600 சதுர மீட்டர் பரப்பளவில் இருக்கும், அதாவது இரு காற்பந்துத் திடலைவிட சற்று பெரியது.

தற்போது இந்த இடத்துக்கு பேருந்து விடுதி (Bus Resort) என்று தற்காலிகமாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.