வெளிநாட்டு ஊழியர்களுக்காக நூற்றுக்கணக்கான விளையாட்டு காலணிகள் நன்கொடை

வெளிநாட்டு ஊழியர்களுக்காக நூற்றுக்கணக்கான விளையாட்டு காலணிகள் நன்கொடை

1 mins read
03963a07-3a06-4629-9dc5-dd5b9a26275f
-
multi-img1 of 2

வெளிநாட்டு ஊழியர்களுக்காக இயங்கி அவர்களுக்குப் பல உதவிகளைப் புரிந்துவரும் 'இட்ஸ் ரெய்னிங் ரெய்ன்கோட்ஸ' என்ற லாபநோக்கற்ற அமைப்பு வெளிநாட்டு ஊழியர்களுக்காக ஒரு விளையாட்டு தின நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய நினைத்தது. ஆனால் அப்படிச் செய்யும்போதுதான் பல ஊழியர்களுக்கு முறையான விளையாட்டு காலணிகள் இல்லாததை ஏற்பாட்டாளர்கள் அறிந்தனர்.

அதனால் உடனே காலணிகள் நன்கொடை கேட்டு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஆகஸ்ட் 17ஆம் தேதி அழைப்பு விடுத்தது 'இட்ஸ் ரெய்னிங் ரெய்ன்கோட்ஸ்'.

ஐந்தே நாள்களில் நூற்றுக்கணக்கான புதிய, பயன்படுத்தப்பட்ட காலணிகள் நன்கொடையாகக் குவிந்தன.

கிட்டத்தட்ட 50 வெளிநாட்டு ஊழியர்கள் நன்கொடையாகக் கிடைத்த காலணிகளைப் பெற்றனர்.

அவற்றைப் பயன்படுத்தி ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெற்ற விளையாட்டு தினத்தில் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

மீதமுள்ள காலணிகள் செப்டம்பர் 3ஆம் தேதி திறக்கப்படவுள்ள 'இட்ஸ் ரெய்னிங் ரெய்ன்கோட்ஸ்' அமைப்பின் புதிய இடத்தில் வைக்கப்படும்.

அப்பர் பாய லேபார் ரோட்டில் அமைந்துள்ள InspIRRE இடத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் தேவைப்படும் பொருள்களை இலவசகமாகப் பெற்றுக்கொள்ளலாம். பொதுமக்களும் அங்கு பொருள்களை நன்கொடை கொடுக்கலாம்.