தனியார் சொத்து வாங்கிய வீவக வீட்டுவாசிகள் குறைவு

தனியார் சொத்து வாங்கிய வீவக வீட்டுவாசிகள் குறைவு

1 mins read
acb42eb3-59e2-43a3-81db-aca54e064ab0
-

தனி­யார் வீட்டை வாங்­கிய வீடமைப்பு வளர்ச்­சிக் கழக வீட்டு உரி­மை­யா­ளர்­கள் எண்­ணிக்கை இந்த ஆண்­டின் முதல் பாதி­யில் குறைந்து இருக்­கிறது.

கடந்த டிசம்­பர் 15ஆம் தேதி நடப்­புக்கு வந்த கட்­டுப்­பா­டு­களும் அதிக அடமான விகி­த­முமே இதற்குக் கார­ணம்.

இந்த ஆண்­டின் முதல் பாதி­யில் வீவக வீடு­க­ளின் மறு­விற்­பனை விலை 5.3% அதி­க­ரித்­தது.

ஆனால் தனி­யார் வீடு­க­ளின் விலை 4.2%தான் கூடி­யது. என்­றா­லும்­கூட தனி­யார் வீட்­டுக்குத் தாவிய வீவ­க­வி­னர் எண்­ணிக்கை குறை­வா­கவே இருந்­தது.

வீவக முக­வ­ரி­யு­டன் கூடி­ய­வர்­கள், 2022 முதல் ஆறு மாதங்­களில் வாங்­கிய புதிய மற்­றும் மறு­விற்­பனை மாடி வீடு­கள் மொத்­தம் 3,649 என்பது தெரியவந்தது.