நம்பிக்கை தந்து ஆர்வத்தை தூண்டிய பேரணி உரை

நம்பிக்கை தந்து ஆர்வத்தை தூண்டிய பேரணி உரை

3 mins read
fdb6fb3b-d7d1-46f9-8f96-18ffffc43330
-

இளையர் குரல்

பொன்­மணி உத­ய­கு­மார்

அண்­மை­யில் நடந்­தே­றிய பிர­த­ம­ரின் தேசிய தினப் பேரணி உரை, குறிப்­பாக இளை­யர்­கள் கவ­னத்தை ஈர்த்த ஒன்­றாக அமைந்­தது. இவ்­வாண்­டின் பேரணி உரையை நான் உன்­னிப்­பா­கக் கவ­னித்து அதைப் பற்­றித் தீர ஆலோ­சிக்­கக் கார­ணம், நான் ஒரு செய்­தி­யா­ளர் என்­பது மட்­டும் கார­ண­மல்ல.

என் நண்­பர்­கள் வட்­டத்­தி­லும் தேசிய தினப் பேரணி அதி­கம் பேசப்­ப­டு­வ­தற்கு, பிர­த­மர் உரை­யில் இடம்­பெற்ற 377ஏ சட்­டம் நீக்­கப்­படும் அறி­விப்பே கார­ண­மா­கும். சமு­தாய மாற்­ற­மும் இளம் சமூ­கத்­தி­ன­ரின் கண்­ணோட்­டம் மாறி­வ­ரும் சூழ­லும் அர­சாங்­கம் இந்த சட்ட ரீதி­யான மாற்­றத்­தைக் கொண்­டு­வ­ரக் கார­ணங்­க­ளா­கி­விட்­டன. இது­கு­றித்து மிக­வும் கவ­ன­மா­க­வும் தெளி­வா­க­வும் பிர­த­மரின் உரை­யில் குறிப்­பி­டப்­பட்­டது.

தொலை­நோக்­குப் பார்வை

தேசிய தினப் பேர­ணி­யில் இடம்­பெற்ற மேலும் பல அறி­விப்­பு­களும் நாட்­டின் திட்­டங்­களும் இளை­யர்­க­ளுக்கு மட்­டு­மல்ல அனைத்து சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் மிக முக்­கி­ய­மாக அமைந்­தன. அடுத்த அரை நூற்­றாண்­டுக்­கான திட்­டங்­க­ளை­யும் பிர­த­மர் பகிர்ந்­தது, சிங்­கப்­பூ­ரின் தொலை­நோக்­குச் சிந்­த­னை­யைப் பிர­தி­ப­லிக்­கிறது.

கொவிட்-19 பெருந்­தொற்­றைப் பற்றி பிர­த­மர் பேசி­ய­போது, ஒன்­றி­ணைந்த தேச­மாக நாம் இழப்­பு­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த திற­மை­யா­கச் செயல்­பட்­டி­ருக்­கி­றோம் என்­பதை உணர்ந்­தேன்.

இதற்கு மாறாக, மற்ற நாடு­கள் எத்­தனை இழப்­பு­களை எதிர்­நோக்­கின என்­ப­தும் புரி­ய­வந்­தது. திறன்­மிக்க தலை­மைத்­து­வ­மும் சீரிய சிந்­த­னை­யும் நன்கு ஆரா­யப்­பட்ட திட்­டங்­க­ளுமே நமது மீட்­சிக்­கான அடித்­த­ள­மா­கும். இனி­வ­ரும் காலத்­தில் பெருந்­தொற்­று­கள் நம்­மைத் தாக்­கி­னா­லும், அதை நாம் கடந்­து­வர முடி­யும் என்ற நம்­பிக்­கையை பிர­த­மரின் உரை அளித்­தது.

வளர்ச்­சிப் பாதை­யில் சிங்­கப்­பூர் முன்­னே­றிச் செல்­லும் இந்த நீண்ட நெடிய பய­ணத்­தில், தடை­கள் வந்­தா­லும் அவற்றை எதிர்­கொள்­ளும் ஆற்­றல் நம்­மி­டத்­தில் உள்­ளது என்ற நம்­பிக்­கை­யும் வருங்­கால சிங்­கப்­பூர் எப்­படி தோற்­ற­ம­ளிக்­கும் என்ற ஆர்­வ­மும் ஏற்­பட்­டுள்­ளது.

உண­வுப் பாது­காப்புத் திட்­டம்

ஆனால் அர­சி­யல் ரீதி­யா­க­வும் பொரு­ளா­தார ரீதி­யா­க­வும் உல­கின் நிகழ்­வு­கள் கணிக்க முடி­யாத வகை­யில் சில ஆண்­டு­க­ளாக அமைந்­தி­ருக்­கின்­றன. இந்த நிகழ்­வு­களைக் கருத்­தில் கொள்­ளும்­போது, நம் நாட்­டின் உணவு உற்­பத்­தி­யும் உண­வுப் பாது­காப்­பும் அக்­க­றைக்­கு­ரிய அம்­சங்­க­ளாக விளங்­கு­கின்­றன.

இத­னால், பிர­த­மர் '30க்குள் 30' எனும் நம் உண­வுத் திட்­டம் குறித்து பேசி­யது என் கவ­னத்தை ஈர்த்­தது.

அர­சாங்­கம் செய்து கொடுக்­கும் வச­தி­களை அனு­ப­விக்­கும் நாம், ஏதோ ஒரு பற்­றாக்­குறை ஏற்­ப­டும்­போ­து­தான் அதைப் பற்றி சிந்­திக்க நேரம் ஒதுக்­கு­கி­றோம். ஆனால் நமக்­குப் பதி­லாக நம் அர­சாங்­கம் சிந்­தித்து, அப்­படி ஒரு நிலை வரு­வதை முன்­கூட்­டியே தவிர்க்க நினைத்து முயற்சி எடுப்­பது மன­நிம்­ம­தி­யைத் தரு­கிறது.

வெளி­நாட்டு பதற்­ற­நிலை குறித்து பிர­த­மர் பேசி­ய­போது சிறு வய­தில் நான் உல­கச் செய்­தி­களுக்­குச் செவி சாய்க்­கா­மல் சுற்­றித் திரிந்­தது என் நினை­வுக்கு வந்­தது.

நான், என் குடும்­பம், என் நண்­பர்­கள், என் வாழ்க்கை என்­ப­தற்­கும் மேலாக என் நாடு என்று சிந்­திப்­ப­தன் அவ­சி­யத்தை உணர்ந்­தேன். கார­ணம், உல­கச் சூழ்­நிலை­கள் எப்­போது மாறும் என்­பதை யாரா­லும் கணிக்க முடி­யாது. எந்­தச் சவா­லை­யும் எதிர்­நோக்­கும் தயார் நிலை­யில் நாம், ஒரு நாடா­கச் செயல்­பட வேண்­டும் என்­ப­தைப் பிர­த­ம­ரின் உரை உணர வைத்­தது.

வேற்­று­மை­யில் ஒற்­று­மையே பலம்

ஆனால், வெளி­யில் இருந்துதான் நமக்கு ஆபத்­து­கள் வரும் என்­ப­தில்லை. சமூக ரீதி­யாக வெவ்­வேறு கோணத்­தில் பிள­வு­கள் ஏற்­ப­டு­வ­தைத் தவிர்க்­க­வேண்­டும் என்­ப­தை­யும் ஒற்­று­மையை நிலை­நாட்­ட­வேண்­டும் என்­ப­தை­யும் பிர­த­மர் கூறி­யது என் சிந்­த­னையை முடுக்­கி­விட்­டது. ஒற்­றுமை நம் மக்­க­ளி­டையே இருக்­கிறது என்று சிறு வய­தி­லி­ருந்தே கற்­பிக்­கப்­பட்டு வளர்ந்த எனக்கு, அந்த நம்­பிக்­கைக்குப் பங்­கம் ஏற்­ப­டக்­கூ­டும் என்ற விழிப்­பு­ணர்வு ஏற்­பட்­டுள்­ளது.

வேற்­று­மை­கள் ஒரு­வ­ரைப் பாதிக்­கும் வகை­யில் முன்­வைக்­கப்­ப­டு­வ­தி­லும் அது சட்­டத்­தால் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­வ­தி­லும் எனக்­குச் சிறி­தும் உடன்­பாடு இல்லை.

சட்­டம் பயின்ற எனக்கு, மனித உரி­மை­களை மக்­க­ளி­ட­மி­ருந்து அப­க­ரித்­து­வி­டக்­கூ­டாது என்ற கடப்­பா­டும் தோன்­றி­யுள்­ளது. வேற்­று­மை­க­ளுக்கு அப்­பாற்­பட்டு ஒற்­று­மை­யைக் கட்­டிக்­காக்க வேண்­டும் எனக் கூறும் நாம், அதை இன ரீதி­யா­க­வும் சமய ரீதி­யா­க­வும் மட்­டும் பார்ப்­பதை மாற்ற வேண்­டும்.

மாற்­றம் ஒன்றே மாறா­தது என்­பது நாம் அறிந்த ஒன்றே. அந்த மாற்­றம் உரிய நேரத்­தில் உரி­ய­வர்­க­ளுக்கு நன்மை பயப்­ப­தற்­காக அமை­யும் என்ற நம்­பிக்­கை­யு­ட­னும் ஆர்­வத்­து­ட­னும் நான் தொடர்ந்து நடை­போ­டு­கி­றேன்.