தியோங் பாரு வட்டாரத்தில் இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் 80 வயது முதியவர் உயிரிழந்தார். மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்ட அந்த மாது சிகிச்சை பலனின்றி மாண்டார்.
இன்று காலை சுமார் 10 மணியளவில் ரெட்ஹில் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகே உள்ள சாலையை முதியவர் கடக்கும்போது தனியார் பேருந்து அவரை மோதியது. சம்பவ இடத்துக்கு விரைந்த குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் அவருக்கு முதலுதவி அளித்தனர். மயக்கநிலையில் அவர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டார்.
கவனக்குறைவாக பேருந்தை ஓட்டி மரணம் விளைவித்த குற்றத்துக்காக 49 வயதான ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார். விசாரணை தொடர்கிறது.

