நண்பர்கள் போல் நடித்து ‌ஏமாற்றும் மோசடி: $4.5மி இழப்பு

நண்பர்கள் போல் நடித்து ‌ஏமாற்றும் மோசடி: $4.5மி இழப்பு

1 mins read
64099be5-25f6-4ce8-8de0-5d10a23e5168
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பாதிக்கப்பட்டவர்களின் நண்பர்கள் போல் நடித்து ‌ஏமாற்றும் மோசடியில் கிட்டத்தட்ட 1,098 பேர் ஏமாற்றப்பட்டுள்ளனர். ஜுனவரி தொடக்கத்திலிருந்து அவர்கள் $4.5 மில்லியனை இழுந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் நண்பர்கள் போல் நடித்து அவர்களுக்கு தொலைபேசி மூலம் அழைத்து பண உதவி கேட்கும் மோசடிகள் அண்மைய காலத்தில் அதிகரித்துவருவதாக காவல் துறையினர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு "+" என்று தொடங்கும் எண்களிலிருந்து அழைப்பு வரும். மோசடிக்காரர்கள் தங்களை முதலில் அடையாளம் காட்டிகொள்ளமாட்டார்கள். அதற்கு பதிலாக "நான் யார் என்று தெரியுமா?" "என்னை ஞாபகம் இல்லையா?" போன்ற கேள்விகளை கேட்பார்கள். அழைப்பவரின் குரலோடு ஒத்துபோகும் தங்கள் நண்பருடைய பெயரை பாதிக்கப்பட்டவர் கூற, அந்த நண்பரை போன்றே மோசடிக்காரர் நடிப்பார். சில நாள்கள் கழித்து, மீண்டும் பாதிக்கப்பட்டவரை அழைத்து தனக்கு பண உதவி தேவைப்படுவதாக மோசடிக்காரர் கூறுவார். பணத்தை அனுப்ப ஒரு வங்கி கணக்கு அல்லது தொலைபேசி எண் அளிக்கப்படும்.

நண்பர்களை தொடர்புகொண்ட பின்னர் தான், தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாகப் பாதிக்கப்பட்டவர்கள் உணர்கின்றனர்.

இதுபோன்ற சம்பவங்களில் நண்பர்களை முதலில் தொடர்புகொண்டு சோதிக்குமாறு காவல் துறை அறிவுறுத்தியது.