ஈராண்டுகள் கழித்து உட்புறங்களில் முகக்கவசம் அணியும் கட்டாயம் இன்றோடு நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல சிங்கப்பூரர்கள் தொடர்ந்து முகக்கவசம் அணியவே விரும்புவதாகத் தெரிகிறது.
கடைத்தொகுதிகளுக்கு சென்ற பலரும் முகக்கவசத்தை அணிந்து சென்றனர். இதற்கு இரண்டு முக்கிய காரணங்களை பலர் கூறினர். சொந்த உடல்நலத்தை பாதுகாக்கவும், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் சுகாதாரத்தை பாதுகாக்கவும் முகக்கவசத்தை தொடர்ந்து அணியவிருப்பதாக பலர் குறிப்பிட்டனர்.
கிளமெண்டி மால் கடைத்தொகுதிக்கு இன்று காலை சென்றிருந்த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குழுவினர் பத்தில் எட்டு பேர் முகக்கவசம் அணிந்திருந்ததாகக் குறிப்பிட்டது. மற்ற பல கடைத்தொகுதிகளிலும் இதே நிலவரம்தான்.
பொதுப் போக்குவரத்து, சுகாதார வசதிகள் ஆகியவற்றை தவிர் மற்ற உட்புறங்களில் முகக்கவசத்தை அணிய தேவையில்லை என்று கொவிட்-19 பணிக்குழு சென்ற வாரம் அறிவித்தது.

