மோசடிகளில் $346 மி. இழப்பு

மோசடிகளில் $346 மி. இழப்பு

1 mins read
789741a7-3baa-4930-ae09-c150d0acfbd3
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம் -

இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் மோசடிகளில் பாதிக்கப்பட்டோர் மொத்தம் $227.8 மில்லியனை இழந்தனர். சென்றாண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது $142.5 மில்லியன் ஏமாற்றப்பட்டது. இழக்கப்பட்ட தொகை மோசடி பட்டியலில் உள்ள முதல் 10 மோசடிகளில் இழக்கப்பட்டது.

பட்டியலில் வேலை மோசடிகள் முதல் இடத்தில் உள்ளது. இந்தாண்டு முதல் பாதியில் வேலை மோசடி சம்பந்தப்பட்ட 3,500 சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டன. இதில் கிட்டத்தட்ட $58 மில்லியன் ஏமாற்றப்பட்டது.

காவல் துறை வெளியிட்ட புள்ளி விவரங்களில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாண்டு முதல் பாதியில் மொத்தம் 14,349 மோசடி சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டன. சென்றாண்டு இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 7,746ஆக இருந்தது. இந்த ஆண்டு மட்டும் மோசடிகளில் மொத்தம் $346.5 மில்லியன் இழக்கப்பட்டது.

இதோடு, ஒட்டுமொத்த குற்ற விகிதம் 36 விழுக்காடு உயர்ந்தது. இணையவழி மிரட்டி பணம் பறித்தல், மானபங்கம் ஆகிய குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்தது இதற்கு காரணம் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் சிங்கப்பூரில் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. வேலை மோசடி, இணைய வர்த்தக மோசடி, முதலீடு மோசடி, ஃபிஷிங் எனப்படும் மின்னஞ்சல் மூலமாக ஏமாற்றி தகவல்களை பெற்று அதை முறைகேடாக பயன்படுத்துவது ஆகிய மோசடிகள் அக்கறைக்குரியதாக இருப்பதாக காவல் துறை கூறியது.