கூடுதலானோர் படகுகளில் ஏறும் வேளையில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: ஈஸ்வரன்

ஒரு படகு மற்­றொரு பட­கு­டன் நேற்று மோதிக்­கொண்­ட­தைத் தொடர்ந்து, 82 பய­ணி­கள் அவற்­றி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­னர். ஆனால் இது ஒரு பாவ­னைப் பயிற்சி.

சிங்­கப்­பூ­ருக்­கும் அண்டை நாடு­க­ளுக்­கும் இடையே பட­குச் சேவை மீண்­டும் தொடங்­கி­யுள்ள வேளை­யில், சிங்­கப்­பூர் கடல்­துறை, துறை­முக ஆணை­யத்­தின் வரு­டாந்­திர படகு மீட்­புப் பயிற்­சி­யான இது மேலும் முக்­கி­யத்­து­வம் பெறு­கிறது.

இந்­தப் பயிற்­சி­யைப் பார்­வை­யிட்ட போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ்.ஈஸ்­வ­ரன், பின்­னர் செய்­தி­யாளர்­க­ளி­டம் பேசி­னார். பட­குச் சேவை மீண்­டும் தொடங்­கப்­பட்­டு இ­ருப்­பது குறித்து பய­ணி­கள், பட­குச் சேவை வழங்­கும் நிறு­வ­னங்­கள், அர­சாங்­க அமைப்­பு­கள் ஆகிய தரப்­பி­ன­ரி­டம் இருந்து நேர்­ம­றை­யான கருத்­து­கள் கிடைத்­துள்ள வேளை­யில், பாது­காப்­பின் முக்­கி­யத்­து­வம் குறித்து திரு ஈஸ்­வ­ரன் வலி­யு­றுத்­தி­னார்.

"பட­குச் சேவை மீண்­டும் தொடங்­கி­யுள்ள போதி­லும், அவை பாது­காப்­பான முறை­யில் தொடர்­வதை நாம் உறு­தி­செய்ய வேண்டும். அதே­வே­ளை­யில், பய­ணி­களின் தேவை­க­ளை­யும் செயல்­பாட்­டுத் தேவை­க­ளை­யும் நாம் பூர்த்­தி­செய்ய வேண்­டும்," என்று அவர் விவ­ரித்­தார்.

இந்த வட்­டா­ரத்­தில் பட­குச் சேவை­யைப் பயன்­ப­டுத்­து­வோர் எண்­ணிக்கை, கொவிட்-19க்கு முந்­திய சூழ­லில் கிட்­டத்­தட்ட 40 விழுக்­காட்டை எட்­டி­யுள்­ள­தாக கடல்­துறை, துறை­முக ஆணை­யம் கூறு­கிறது. முழுச் செயல்­பாட்­டிற்­குத் திரும்­பி­யுள்ள ஹார்­பர்­ஃபி­ரண்ட் மற்­றும் தானா மேரா படகு முனை­யங்­களில் இருந்து டெசாரு, பாத்தாம், பிந்தான் தீவு­க­ளுக்கு பட­குச் சேவை­கள் மீண்­டும் தொடங்­கி­யுள்­ளன.

கொவிட்-19 பெருந்­தொற்று கார­ண­மாக கடந்த ஈராண்­டு­க­ளாக படகு மீட்­புப் பயிற்­சி­யின் அளவு குறைக்­கப்­பட்­டது. கடந்த ஆண்டு 50 பேர் இதில் பங்­கேற்­ற­னர்.

'கட­லில் அனைத்­து­ல­கப் பாது­காப்பு' மாநாட்டை முன்­னிட்டு நேற்று நடை­பெற்ற பயிற்­சி­யில் பல்­வேறு அமைப்­பு­க­ளைச் சேர்ந்த 200க்கும் அதி­க­மா­னோர் கலந்­து­கொண்­ட­னர். குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வடி ஆணை­யம், சுகா­தார அமைச்சு, காவல்­துறை, சிங்­கப்­பூர் குடி­ய­ரசு ஆகா­யப் படை, 'பாத்­தாம் ஃபாஸ்ட் ஃபெரி' போன்ற தனி­யார் நிறு­வ­னங்­கள் உள்­ளிட்­டவை இந்தப் ப­யிற்­சி­யில் பங்­கெ­டுத்­தன.

செந்­தோசா தீவின் மேற்கு கரை­யோ­ரப் பகு­தி­யி­லும் ஹார்­பர்­ஃபிரண்ட் முனை­யத்­தி­லும் நடை­பெற்ற இப்­ப­யிற்சி, இரு பட­கு­கள் ஒன்­றோடு ஒன்று மோதிக்­கொள்வதை சித்­தி­ரித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!