கொவிட்-19 விதிமுறை தளர்வால் மீண்டும் மலரும் 'மாபெரும் சிங்கப்பூர் விற்பனை'

கொவிட்-19 விதிமுறை தளர்வால் மீண்டும் மலரும் 'மாபெரும் சிங்கப்பூர் விற்பனை'

2 mins read
3cc47af0-3c1d-47ce-8841-5db4b2e13f73
-

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் கணி­ச­மாக தளர்வு கண்­டுள்­ள­தைத் தொடர்ந்து, வாடிக்­கை­யா­ளர்­களை ஈர்க்க 'மாபெ­ரும் சிங்­கப்­பூர் விற்­பனை' அடுத்த மாதம் முழு­வீச்­சு­டன் திரும்­பு­கிறது.

28வது மாபெ­ரும் சிங்­கப்­பூர் விற்­பனை, செப்­டம்­பர் 9 முதல் அக்­டோ­பர் 10 வரை இடம்­பெற இருக்­கிறது. செப்­டம்­பர் 30 முதல் அக்­டோ­பர் 2ஆம் தேதி­வரை நடை­பெ­றும் எஃப்1 கார் பந்­த­ய­மும் இதே கால­கட்­டத்­தில் இடம்­பெ­று­கிறது.

கொவிட்-19 பெருந்­தொற்று கார­ண­மாக கடந்த ஈராண்­டு­க­ளாக வர்த்­த­கங்­க­ளுக்­குப் பெரும் பாதிப்பு ஏற்­பட்­டது. இந்­நி­லை­யில் கடைத்­தொ­கு­தி­க­ளுக்கு வாடிக்­கை­யா­ளர்­களை ஈர்க்க சில்­லறை விற்­ப­னை­யா­ளர்­கள் இவ்­வாண்டு பெரு­மு­யற்சி மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

கடை­க­ளி­லும் இணை­யத்­தி­லும் அன்­றா­டச் சலு­கை­க­ளை­யும் மின் கூப்­பன்­க­ளை­யும் வழங்க, சிங்­கப்­பூர் சில்­லறை விற்­ப­னை­யா­ளர் சங்­கம் அதன் 'கோஸ்­பிரீ' செயலி­யைப் பயன்­ப­டுத்­தும். சில்­லறை விற்­பனை, உணவு பானம், ஹோட்டல், கண்­க­வர் இடங்­கள் ஆகிய துறை­களில் வாடிக்­கை­யா­ளர்­கள் பல்­வேறு சிறப்­புத் தள்­ளு­படி­க­ளை­யும் எதிர்­பார்க்­க­லாம்.

மேலும், 9.9, 10.10 'ஆச்­ச­ரி­யப் பெட்டி'களும் வழங்­கப்­படும். $99 பெறு­மா­ன­முள்ள பொருள்­கள் செப்­டம்­பர் 9ஆம் தேதி $9.90க்கும் $100 பெறு­மா­ன­முள்ள பொருள்­கள் அக்­டோ­பர் 10ஆம் தேதி $10க்கும் விற்­கப்­படும்.

மாபெ­ரும் சிங்­கப்­பூர் விற்­ப­னை­யின் மற்­றொரு சிறப்­பம்­சம், 'பேக் இட் அப்' எனப்­படும் இரு­வ­ழித் தொடர்பு அம்­சங்­க­ளைக் கொண்ட விளை­யாட்டு.

அதில் $20,000 மதிப்­பி­லான பரி­சு­க­ளை­யும் பற்றுச்­சீட்­டு­க­ளை­யும் வெல்­வ­தற்­கான வாய்ப்பு அளிக்­கப்­படும்.

'பசார் சிங்­கப்­பூரா' எனும் மெய்­நி­கர் இயக்­க­மும் இடம்­பெ­றும். 'உள்­ளூர்­வா­சி­க­ளுக்­காக, உள்­ளூர்­வா­சி­க­ளால்' எனப்­படும் கருப்­பொரு­ளைக் கொண்­டுள்ள இந்த இயக்­கத்­தின்­கீழ் உள்­ளூர் வர்த்­த­கங்­கள் சிறப்­புச் சலு­கை­களை வழங்­கும்.

'கோஸ்­பிரீ' செய­லி­யில் வாடிக்­கை­யா­ளர்­கள் அச்­ச­லு­கை­களைப் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

2020ல் மாபெ­ரும் சிங்­கப்­பூர் விற்­பனை முதன்­மு­றை­யாக இணை­யத்­தில் இடம்­பெற்­றது. சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 நோய்ப் பர­வல் முறி­ய­டிப்­புத் திட்­டம் அப்­போது முடி­வுக்கு வந்­தது.

இணைய விற்­பனையை அதி­க­ரிக்க, கடந்த ஆண்டு சிங்­கப்­பூர் சில்­லறை விற்­பனை­யா­ளர் சங்­கம், லஸாடா நிறு­வ­னத்­து­டன் கைகோத்து செயல்­பட்­டது.

இவ்­வாண்டு எஃப் 1 கார் பந்­த­யத்தை முன்­னிட்டு கூடு­த­லான சுற்­றுப்­ப­ய­ணி­கள் இங்கு வர­வுள்­ள­தால், மாபெ­ரும் சிங்­கப்­பூர் விற்­பனை களை­கட்­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.