இவ்வாண்டின் முற்பாதியில் $227.8 மில்லியன் இழப்பு

இவ்வாண்டின் முற்பாதியில் $227.8 மில்லியன் இழப்பு

3 mins read
42de3349-a07c-4ee3-898a-9fda13db71f9
இம்மாதம் ஆண்ட்ராய்ட் கருவிகளுக்கும் ஸ்கேம்ஷீல்டு செயலி அறிமுகப்படுத்தப்படுகிறது. படம்: சாவ்பாவ் -

இவ்­வாண்­டின் முதல் ஆறு மாதங்­களில் ஆக அதி­க­மாக நிகழ்ந்த 10 மோசடி வகை­கள் மூலம் மொத்­தம் $227.8 மில்­லி­யன் இழப்பு ஏற்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. கடந்த ஆண்டு இதே கால­கட்­டத்­தில் $142.5 இழப்பு ஏற்­பட்­டது.

பொது­மக்­க­ளைப் பாதித்த

மோச­டி­களில் வேலை தொடர்­பான மோசடியே ஆக மோச­மான பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யது. இவ்­வாண்­டில் இது­வரை 3,500 வேலை மோச­டி­கள் குறித்து புகார் செய்­யப்­

பட்­டுள்­ளன. அவற்­றின் மூலம் $58 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான இழப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக காவல்­துறை நேற்று வெளி­யிட்ட புள்­ளி­வி­வ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

இவ்­வாண்­டில் இது­வரை மொத்­தம் 14,349 மோச­டி­கள் பதி­வாகி உள்­ளன. கடந்த ஆண்­டின் முதல் ஆறு மாதங்­களில் 7,746 மோச­டி­கள் பதி­வா­கின. இது இவ்­வாண்­டை­விட கிட்­டத்­தட்ட இரு­ம­டங்கு குறைவு.

ஒட்­டு­மொத்த அடிப்­ப­டை­யில் குற்­றச் செயல்­கள் 36 விழுக்­காடு அதி­க­ரித்­துள்­ளன. மான­பங்­கம், இணை­யம் மூலம் மிரட்­டல் விடுத்­தல் ஆகிய குற்­றங்­கள் அதி­க­ரித்­துள்­ளன.

"சிங்­கப்­பூ­ரில் மோச­டிக் குற்­றங்­

க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­மாக இருக்­கிறது. சிங்­கப்­பூ­ரில் நிக­ழும் மோச­டி­களில் 90 விழுக்­காடு வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து புரி­யப்­ப­டு­கின்­றன. மோச­டிக்­கா­ரர்­கள் பொது­வாக குற்­றக் கும்­பல்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள். இவர்­கள் எல்­லைத் தாண்­டிய குற்­றங்­களில் ஈடு­ப­டு

­ப­வர்­கள். இந்­தக் கும்­பல்­க­ளைக் கண்­டு­பி­டிப்­ப­தும் முறி­ய­டிப்­ப­தும் சிர­மம். மேலும் இந்த மோச­டிக்­

கா­ரர்­கள் பல வளங்­க­ளைக் கொண்­டுள்­ள­னர். தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்தி தங்­கள் அடை­யா­ளத்தை மறைத்து தப்­பிக்­கக்­கூ­டி­ய­வர்­கள்," என்று காவல்­துறை கூறி­யது.

வேலை மோச­டி­கள், தனிப்­பட்ட விவ­ரங்­க­ளைத் திரு­டு­வது, மின்­வர்த்­தக மோச­டி­கள், முத­லீட்டு மோச­டி­கள் ஆகி­யவை தொடர்ந்து அக்­க­றைக்­கு­ரி­ய­வை­யாக இருப்­ப­தாக காவல்­துறை தெரி­வித்­தது. இவ்­வாண்­டில் முதல் ஆறு மாதங்­களில் நிகழ்ந்த ஆக அதி­க­மான 10 மோச­டி­களில் இவை 74.5 விழுக்­காடு என்று தெரி­விக்­கப்­பட்­டது.

ஆக அதிக பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் மோச­டிப் பட்­டி­ய­லில் கடந்த ஆண்­டில் ஐந்­தா­வது இடத்­தில் இருந்த வேலை மோசடி இவ்­வாண்டு முத­லி­டத்­தில் உள்­ளது.

இரண்­டா­வது இடத்­தில் தனிப்­பட்ட விவ­ரங்­கள் திருட்டு உள்­ளது. இது­தொ­டர்­பாக 2,300க்கும் அதி­க­மான குற்­றங்­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. இவற்­றின் மூலம் மொத்­தம் $7.8 மில்­லி­யன் இழப்பு ஏற்­பட்­டுள்­ளது.

கடந்த ஆண்டு முதல் ஆறு மாதங்­களில் 1,057 மின்­வர்த்­தக மோச­டி­கள் நிகழ்ந்­த­தா­க­வும் இவ்­வாண்­டின் முற்­ப­கு­தி­யில் அது 2,267ஆக அதி­க­ரித்­த­தா­க­வும் காவல்­துறை தெரி­வித்­தது.

இவ்­வாண்­டின் முதல் ஆறு மாதங்­களில் மோச­டித் தடுப்பு மையம் 7,800க்கும் மேற்­பட்ட வங்­கிக் கணக்­கு­களை முடக்கி ஏறத்­தாழ $80 மில்­லி­யனை மீட்­டெ­டுத்­த­தாக காவல்­துறை கூறி­யது.

இதற்­கி­டையே, மோச­டிக் குற்­றங்­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்­தப்­பட்ட 24,500 தொலை­பேசி எண்­களை ஸ்கேம்­ஷீல்டு செயலி தடுத்­தி­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 5.1 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான குறுஞ்­செய்­தி­கள் குறித்­தும் இச்­செ­யலி மூலம் புகார் செய்­யப்­பட்­டுள்­ளது.

ஸ்கேம்­ஷீல்டு செயலி 2020ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. இந்­தச் செய­லியை தேசிய குற்­றத் தடுப்பு மன்­ற­மும் சிங்­கப்­பூர் காவல்­து­றை­யும் நிர்­வ­கிக்­கின்­றன. ஆப்­பிள் நிறு­வ­னத்­தின் ஐஓ­எஸ் கரு­வி­க­ளைப் பயன்­ப­டுத்­தும் 300,500 பேர் இந்­தச் செய­லியை பதி­வி­றக்­கம் செய்­துள்­ள­னர். ஆண்ட்­ராய்ட் கரு­வி­க­ளைப் பயன்­ப­டுத்­து­வோர் அடுத்த மாதத்­தி­லி­ருந்து இந்­தச் செய­லி­யைப் பயன்­ப­டுத்­த­லாம். மோச­டிக் குறுஞ்­செய்­தி­கள், அழைப்­பு­களை இந்­தச் செயலி அடை­யா­ளம் கண்டு தடுப்­ப­தாக காவல்­துறை கூறி­யது.

அத்­து­டன் மோச­டிக்­கா­ரர்­க­ளின் உத்­தி­கள் குறித்­தும் செயலி தெரி­விக்­கும். பல்­வேறு மோச­டி­கள் குறித்து வங்கி வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த புதுப்­பிக்­கப்­பட்ட புதிர்ப் போட்­டி­யும் நேற்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.