உலக நாடுகளில் உள்ள பல நிறுவனங்களைப் போலவே பணயத் தீநிரலால் (Ransomware) கடந்த ஆண்டு 137 சிங்கப்பூர் நிறுவனங்கள் பாதிப்படைந்தன. பணயத் தீநிரல் தனிப்பட்ட விவரங்களைத் திருடி தகவல் மறைப்பு செய்து அவற்றைப் பூட்டி விடும்.
தங்கள் தனிப்பட்ட விவரங்களைத் திரும்ப பெற்றுக்கொள்ள அவற்றின் உரிமையாளர்கள் பணயத் தொகையைச் செலுத்த வேண்டும்.
சில சமயங்களில் தனிப்பட்ட விவரங்களை வெளியிடப்போவதாக மோசடிக்காரர்கள் மிரட்டுவர். அவ்வாறு ஏற்படாதிருக்க அவர்கள் பணயத் தொகை கேட்பர்.
கடந்த ஆண்டு பணயத் தீநிரலால் பாதிப்படைந்து பணயத் தொகையைச் செலுத்தி அவற்றின் தனிப்பட்ட விவரங்களைத் திரும்பப் பெற்றுக்கொண்ட உள்ளூர் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு கூறியது.
2020ஆம் ஆண்டில் பணயத் தீநிரலால் 89 உள்ளூர் நிறுவனங்கள் பாதிப்படைந்தன.
பணயத் தீநிரலால் பாதிக்கப்பட்ட உள்ளூர் நிறுவனங்களில் பெரும்பாலானவை தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறையைச் சேர்ந்த சிறிய, நடுத்தர நிறுவனங்கள் எனக் கண்டுபிடிக்கப்
பட்டுள்ளது.
இந்நிலையில், இணைய ஊடுருவல்காரர்களின் கட்டுக்குள் வந்த உள்ளூர் இணையக் கட்டமைப்பு
களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு மும்மடங்கு ஏற்றம் கண்டது.
கடந்த ஆண்டு 3,300 இணையக் கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டன.

