எவ்வளவு கூறியும் பலனில்லை; ஆதங்கத்தைக் கொட்டிய அண்டைவீட்டார்

எவ்வளவு கூறியும் பலனில்லை; ஆதங்கத்தைக் கொட்டிய அண்டைவீட்டார்

1 mins read
80ca4313-1707-44b4-bb20-067e5e29bf4e
-

அண்­மை­யில் புளோக் 236 ஜூரோங் ஈஸ்ட் ஸ்தி­ரீட் 21ல் உள்ள வீடு தீக்கு இரை­யா­னது. அந்த வீட்­டில் இருந்த ஒரு­வர் மாண்­டார். மற்­றொ­ரு­வர் உயிர் பிழைத்­தார். தீச்­சம்

­ப­வம் இம்­மா­தம் 16ஆம் தேதி அதி­காலை நிகழ்ந்­தது.

அந்த வீட்­டுக்கு வெளியே தேவை­யற்ற பல பொருள்­கள் குவிக்­கப்­ப­டு­வ­தாக கடந்த ஒன்­பது ஆண்­டு­க­ளா­கப் பல்­வேறு அமைப்­பு­க­ளுக்கு அண்­டை­வீட்­டா­ரான 56 வயது திரு குமார் நூற்­றுக்­க­ணக்­கான மின்­னஞ்­சல்­களை அனுப்­பி­னார்.

ஆனால் தகுந்த நட­வ­டிக்கை ஏதும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்­றார் அவர்.

இந்­நி­லை­யில், அவர் அஞ்­சி­யது போல அந்த வீடு தீப்­பற்றி எரிந்­தது.

திரு குமார் புகார் செய்த பிறகு சம்­பந்­தப்­பட்­ட­வ­ரு­டன் இணைந்து செயல்­பட வீவக, நகர மன்­றம் முயற்சிகள் எடுத்ததாக யூஹுவா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கிரேஸ் ஃபூ தெரிவித்தார்.