இந்து இளையர் மன்றத்தைச்(Hindu Youth Network) சேர்ந்த ஹரன் புனிதனும் சுவாமிநாதனும் இணைந்து விநாயகரை புகழ்ந்து சமஸ்கிரதத்தில் பாடியுள்ள பாடலின் காணொளி இன்று வெளியிடப்படவுள்ளது.
மேற்கத்திய இசை அம்சங்களும் இந்திய இசை அம்சங்களும் கொண்டுள்ள இப்பாடல், சங்கர் மகாதேவனின் பாடலான, "ஸ்ரீ கணேஷாய தீமஹி" (cover) ஆக அமைகின்றது.
"மேற்கத்திய பாணியில் சற்று அமைந்தாலும் இந்திய கலாசாரத்தையும் இந்து சமயத்தையும் கட்டிக்காக்கின்றது இந்த பாடல்," என்றார் ஹரன்.
இப்பாடலின் காணொளி கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் ஆலயத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு 6,000 தேங்காய்களை உபயோகித்து உருவாக்கப்பட்ட பெரும் விநாயகர் சிலையும் பாடல் காட்சியில் இடம்பிடித்து பாடலுக்கு சிறப்புச் சேர்த்துள்ளது.

