தனியார் சுகாதாரப் பராமரிப்புக் கட்டணம் அதிகரித்து வருகிறது

தனியார் சுகாதாரப் பராமரிப்புக் கட்டணம் அதிகரித்து வருகிறது

2 mins read
96944517-c229-4313-a378-2269722ad4a0
சுகாதாரச் செலவு கூடியது ஒரு காரணம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புச் சேவை­க­ளுக்­கான செலவு அதி­க­ரித்து வரு­கிறது. கூடு­த­லான சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு காப்­பு­று­தித் திட்­டங்­கள் செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­வது இதற்­குக் கார­ணம்.

அத­னால் தனி­யார் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் திட்­டங்­க­ளுக்­கான கட்­ட­ணமும் உயர்ந்து வரு­கிறது. இந்நிலை தொட­ரும் எனக் கணிக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வாண்­டின் முதல் ஏழு மாதங்­களில் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை­யின் பண­வீக்க விகி­தம் அதி­க­ரித்­தது. ஆண்­டு அடிப்­படை­யில் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புச் செலவு 1.7 விழுக்­காடு கூடி­ய­தென சென்ற மாதத்­திற்­கான பய­னீட்­டா­ளர் விலை குறி­யீட்டு அறிக்­கை­யில் தெரி­ய­வந்­தது.

சென்ற ஆண்டு முழு­வ­தற்­கு­மான பணவீக்க விகி­தம் 1.1 விழுக்­கா­டு.

எனி­னும், இவ்­வாண்­டின் முதல் ஏழு மாதங்­களில் பதி­வான ஒட்­டு­மொத்த பண­வீக்க விகி­தத்­தைக் காட்­டி­லும் சுகா­தா­ரப் பராமரிப்புக்கான விகி­தம் குறைவு.

ஒட்­டு­மொத்த பண­வீக்க விகி­தம் 5.5 விழுக்­கா­டா­க­வும் சுகா­தாரப் பரா­ம­ரிப்­புக்­கான பண­வீக்க விகி­தம் 3.4 விழுக்­கா­டா­க­வும் பதி­வா­னது.

போக்­கு­வ­ரத்து, தங்­கும் வசதி ஆகி­ய­வற்­றுக்­கான செலவுகள் ஒட்­டு­மொத்த பண­வீக்க விகி­தத்­தைக் கணக்­கி­டும்­போது கருத்­தில்­கொள்­ளப்­ப­டமாட்டா.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் காப்­புறுதித் திட்­டங்­க­ளுக்­கான செலவு 2.5 விழுக்­காடு கூடி­யது. மருத்து­வ­மனைச் சேவை­க­ளுக்­கான செல­வும் இரண்டு விழுக்­காடு அதி­க­ரித்­தது.

இத்­த­கைய கார­ணங்­க­ளால் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புப் பண­வீக்க விகி­தம் உயர்ந்­தது.

சென்ற மாதத்­திற்­கான பய­னீட்­டா­ளர் விலைக் குறி­யீட்டு அறிக்­கை­யின்­படி வெளி­நோ­யா­ளி­ச் சேவை­களுக்­கான செலவு 1.8 விழுக்­காடு கூடி­யது. சென்ற ஆண்டு முழு­வ­தும் பதி­வா­ன­தைக் காட்­டி­லும் இவ்­வாண்­டின் முதல் ஏழு மாதங்­களில் மட்­டுமே மருந்து­களுக்­கான செலவு 0.6 விழுக்­காடு அதி­க­ரித்­தது. நிலைமையைக் கையாள வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்குக் கைகொடுக்க சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் காப்­பு­று­தித் திட்­டத்­தைச் செயல்­ப­டுத்­தா­தோருக்குக் கட்­ட­ணக் கழிவு வழங்கு­வது போன்ற சலு­கை­களை காப்­பு­றுதி நிறு­வ­னங்­கள் வழங்கி வரு­கின்­றன.