விலை, நிலையான விநியோகம் குறித்து அச்சம்

விலை, நிலையான விநியோகம் குறித்து அச்சம்

2 mins read
92fa3c79-152a-44cb-8323-21f45e64fc40
கோவன் ஈரச்சந்தையில் உள்ள ஒரு கோழி இறைச்சிக் கடை. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வரும் அக்­டோ­பர் மாதம் முதல் மலே­சியா மீண்­டும் கோழி­ இறைச்சியை ஏற்­று­மதி செய்­ய­வுள்ளது. இந்த முடிவை வர­வேற்­றா­லும் கோழி இறைச்சி விநி­யோ­கத்­தில் ஏற்­ப­டக்­கூ­டிய இடை­யூ­று­கள், அதன் விலை அதி­க­மாக இருப்­ப­தற்­கான சாத்­தி­யம் போன்ற அம்­சங்­க­ளின் தொடர்­பில் பய­னீட்­டா­ளர்­கள், பண்ணை விலங்­கு­களின் இறைச்­சியை விற்­கும் கடைக்­கா­ரர்­கள் ஆகி­யோ­ரி­டையே அச்­சம் நில­வு­கிறது.

மலே­சியா மீண்­டும் கோழி இறைச்­சியை ஏற்­று­மதி செய்­தா­லும் விநி­யோ­கம் சீராக இருக்­கும் எனச் சொல்லமுடியாது என்று கோழிச் சோறு விற்­கும் சில கடைக்­கா­ரர்­கள் அஞ்­சு­கின்­ற­னர்.

சில கட்­டுப்­பா­டு­க­ளு­டன்­தான் மலே­சியா மீண்­டும் கோழி­ இறைச்சியை ஏற்­று­மதி செய்­ய­வுள்ளது. ஏற்­று­மதி செய்ய அந்நாட்டின் சில பண்­ணை­க­ளுக்கு மட்­டுமே அனு­மதி வழங்­கப்­ப­ட்டுள்­ளது கட்டுப்பாடுகளில் ஒன்று.

உள்­ளூ­ரில் கோழி இறைச்சி வாங்­கு­வோ­ருக்­குத் தொடர்ந்து முன்­னு­ரிமை வழங்­கப்­ப­ட­வேண்­டும் என்று மலே­சி­யா­வின் பண­வீக்­கத்­தைக் கையாள்­வ­தற்­கான செயற்­கு­ழு­வின் தலை­வர் அனு­வார் மூசா கூறி­னார்.

தேவைக்கு சற்று அதி­க­மான அள­வில் கோழி இறைச்சி இருந்­தா­லும் மலே­சியா இதே நிலைப்­பாட்­டைத்­தான் கடைப்­பி­டிக்­கும் என்றார் அவர்.

இப்­ப­டிப்­பட்ட சூழ­லில் மலே­சியா எந்­நே­ர­மும் கோழி இறைச்சி ஏற்று­மதியை மீண்­டும் நிறுத்­தக்­கூ­டும் என்று சில கோழிச் சோறு கடைக்­கா­ரர்­கள் வருத்­தம் தெரி­வித்­த­னர்.

ஒரு­வேளை எதிர்­பாராவித­மாக மலே­சியா ஏற்­று­ம­தியை திடீ­ரென நிறுத்­தி­னால் தாங்­கள் மீண்­டும் நாட்டுக் கோழி இறைச்­சி­யைப் பயன்­ப­டுத்த நேரி­டும் என்­பது அவர்­க­ளின் கவலை. நாட்டுக் கோழி இறைச்­சி­யின் விலை அதி­கம் என்­ப­தால் அது தங்­க­ளின் வர்த்­த­கத்­தைப் பாதிக்­கும் என்று கடைக்­கா­ரர்­கள் அஞ்­சு­கின்­ற­னர்.

எனி­னும், ஏற்­று­ம­தித் தடை விலக்­க­ப்ப­டு­வதை எண்ணி சில கடைக்­கா­ரர்­கள் மகிழ்ச்சி தெரி­வித்­த­னர். விரை­வில் கோழி இறைச்சி ஏற்­று­மதி மீண்­டும் தொடங்­கும் என்­றும் விநி­யோகம் சீராக இருக்­கும் என்­றும் அவர்­கள் நம்­பிக்கை கொண்­டுள்­ள­னர்.

ஏற்­று­மதித் தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­த­போது சில கடை­களில் 'சிக்­கன் ரைஸ்' விலை ஒரு வெள்ளி கூடி­யது. மேலும், அதன் சுவை மாறு­பட்­டி­ருந்­த­தா­க­வும் வாடிக்­கை­யா­ளர்­கள் கருத்து தெரி­வித்­த­தா­க­ கடைக்­கா­ரர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

அக்டோபர் மாதத்திலிருந்து மலேசியா மீண்டும் கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்யவுள்ளது