செய்திக்கொத்து

செப்டம்பர் 12 நாடாளுமன்றக் கூட்டம்

அடுத்த மாதம் 12ஆம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கும் என்று நாடாளுமன்ற அலுவலர் நேற்று தெரிவித்துள்ளார்.

'வேலை அனுமதி அட்டை மாற்றங்கள்

சிங்கப்பூரர்களுக்கும் பலனளிக்கும்'

உலக நாடுகளிலிருந்து ஆகச் சிறந்த திறனாளர்களை ஈர்ப்பதன் மூலம் சிங்கப்பூர் ஊழியர்களும் பலனடைவர் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார்.

உலகளவில் திறனாளர்களுக்கான மையமாக சிங்கப்பூர் விளங்குகிறது. அதை வலுப்படுத்த வேலை அனுமதி அட்டை கட்டமைப்பில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட மாற்றங்களைப் பற்றி டாக்டர் டான் பேசினார்.

வெளிநாடுகளிலிருந்து ஆகச் சிறந்த திறனாளர்களை ஈர்க்க அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வேலை அனுமதி அட்டை மாற்றங்களில் அடங்கும். ஓர் ஊழியர் மாதந்தோறும் குறைந்தபட்சமாக 30,000 வெள்ளி சம்பளம் பெறவேண்டும் என்பது அந்த அட்டைக்குத் தகுதிபெறுவதற்கான நிபந்தனைகளில் ஒன்று.

"உலக நாடுகளிலிருந்து ஆகச் சிறந்த திறனாளர்களை ஈர்ப்பதன் மூலம் அவர்களின் தொடர்புகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம், அவர்களின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளலாம், அதற்குப் பிறகு சிங்கப்பூரர்களிடையே கூடுதல் திறனாளர்களை உருவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளைத் துரிதப்படுத்தலாம்," என்று டாக்டர் டான் சுட்டினார்.

0% என்றால் இனிப்பு இல்லை எனப் பொருளாகாது

'மில்க் டீ' (படம்: அன்ஸ்பிளாஷ்) எனும் பால் கலந்து தேநீர் போன்ற பானங்களில் பூஜ்ஜியம் விழுக்காடு சர்க்கரை உள்ளது எனக் குறிப்பிடப்பட்டால் அவற்றில் சர்க்கரை இல்லை என்று பொருளாகாது. 500 மில்லிலிட்டர் அளவு பானத்தில் சராசரியாக ஒன்றரை தேக்கரண்டி அளவு சர்க்கரை இருக்கும் என்று சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் உணவு அங்க முறையில் இடம்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே பானத்தில் 'டேப்பியோக்கா பெர்ல்ஸ்' எனப்படும் மரவள்ளிக்கிழங்கு இனிப்பு உருண்டைகளைச் சேர்த்தால் சர்க்கரை அளவு இரு மடங்காகும்.

சிங்கப்பூரர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 12 தேக்கரண்டி அளவு சர்க்கரையை உட்கொள்வதாக 2018, 2019ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தேசிய ஊட்டச்சத்து கருத்தாய்வில் தெரியவந்தது. ஒரு நாளில் சாப்பிடும் உணவின் அளவில் 10 விழுக்காட்டுக்கு மேல் சர்க்கரை சேர்த்துக்கொள்ளவேண்டாம் என்று சுகாதார மேம்பாட்டு வாரியம் பரிந்துரைக்கிறது. அப்படியென்றால் பெரியவர்கள் ஒரு நாளில் ஒன்பதிலிருந்து 11 தேக்கரண்டிகளுக்கு மேல் சர்க்கரை உட்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

அடுத்த ஆண்டிறுதிக்குள் அதிக சர்க்கரை அளவும் உறைந்த கொழுப்புச் சத்தும் உள்ள பானங்களில் ஊட்டச்சத்து விவரங்களைத் தெரிவிக்கும் குறிப்பு இடம்பெறவேண்டும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் இம்மாதம் 11ஆம் தேதியன்று அறிவித்திருந்தார்.

கடற்பகுதியில் 5ஜி கட்டமைப்பு

தானியக்கக் கப்பல்கள், மின்னியல் சாதனங்களால் இயக்கப்படும் கப்பல்கள் ஆகியவற்றைச் செயல்படுத்த சிங்கப்பூர் எண்ணம் கொண்டுள்ளது. அதையொட்டி கடற்பகுதிகளில் 5ஜி கட்டமைப்பை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

"2025ஆம் ஆண்டுக்குள் நமது கப்பல் நிறுத்துமிடங்கள், கப்பல் போக்குவரத்துப் பாதைகள், முனையங்கள், கப்பல் ஏறும் நிலையங்கள் ஆகியவற்றில் 5ஜி கட்டமைப்பை முழுமையாகச் செயல்படுத்துவது எங்கள் இலக்கு," என்று போக்குவரத்து, நிதி ஆகியவற்றுக்கான மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் கூறினார்.

கடற்பகுதிகளுக்கான 5ஜி கட்டமைப்பை உள்ளூர் தொலைத்தொடர்பு நிறுவனமான எம்1 உருவாக்கும். கட்டமைப்பு, சிங்கப்பூரின் கடற்பகுதிகளில் கட்டங்கட்டமாக செயல்படுத்தப்படும் என்று திரு சீ தெரிவித்தார்.

'இன்டர்நேஷனல் சேஃப்டி@சீ' எனும் கடற்பகுதிப் பாதுகாப்பு தொடர்பிலான மாநாட்டில் அவர் பேசினார். சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் இந்த மாநாடு நடைபெற்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!