'வர்த்தக சச்சரவுகளைத் தீர்ப்பதில் சிங்கப்பூர் முக்கியப் பங்காற்றலாம்'

'வர்த்தக சச்சரவுகளைத் தீர்ப்பதில் சிங்கப்பூர் முக்கியப் பங்காற்றலாம்'

3 mins read
9e6215d0-d8a6-4fb2-b663-15713a8dd6a8
-

வரும் 2030க்­குள் உல­கின் நான்­காவது பெரிய பொரு­ளி­யலாக ஆவ­தற்­கான ஆசி­யான் முயற்­சி­யில், வணி­கங்­க­ளுக்கு இடையே எல்லை தாண்­டிய சர்ச்­சை­களை அதி­க­ரிக்­க­லாம். இந்த சர்ச்­சை­களைத் தீர்ப்­ப­தில் சிங்­கப்­பூர், அதன் வலு­வான சட்ட அமைப்பு, உள்­கட்­ட­மைப்­பு­டன், முக்­கியப் பங்கு வகிக்க முடி­யும் என்று சட்ட ​இரண்­டா­ம் அமைச்­சர் எட்­வின் டோங் கூறி­யுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்­து­லக வர்த்­தக சட்ட அகா­ட­மி­யின் 'சிங்­கப்­பூர் மாநாட்டு வாரம்' எனும் மூன்று நாள் மாநாட்­டில் அவர் உரையாற்றினார்.

கடந்த ஆண்டு ஆசி­யா­வில் சாதனை அள­வில் வெளி­நாட்டு நேரடி முத­லீ­டு­கள் வந்­த­தா­க­வும், இந்த முத­லீ­டு­கள் முதிர்ச்­சி­ய­டை­யும்­போது சர்ச்­சை­கள் ஏற்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தா­க­வும் கலா­சார, சமூக, இளை­யர்துறை அமைச்­ ச­ரு­மான டோங் கூறி­னார்.

"பல பெரிய வணி­கங்­கள் சிங்­கப்­பூ­ருக்கு வந்து சர்ச்­சை­க­ளைத் தீர்க்க முயல்வதைப் பார்த்­தி­ருக்­கி­றோம். ஏனெ­னில் அவர்­க­ளது உறவு பல ஆண்டு கால உறவு.

"பெரிய உள்­கட்­ட­மைப்பு திட்­டங்­க­ளுக்கு அந்­த துறை­யில் சிறந்த அதே ஒப்­பந்­தக்­கா­ரர்­கள், துணை ஒப்­பந்­தக்­கா­ரர்­க­ளையே நாடு­கி­றோம். அந்த உறவை முடிந்­த­வரை பாது­காக்க முயற்­சி செய்வது அவர்­க­ளுக்கு நல்­லது," என்­றார் அமைச்சர்.

நாடு­க­ளுக்­கி­டை­யே­யான சர்ச்­சை­களில் வணிக உற­வைக் காப்­பாற்ற, நடு­நி­லை­யான மூன்­றாம் தரப்பு சம­ர­சப் பேச்­சு­வார்த்தை மூலம் புதிய ஒப்­பந்­தத்தை நாட­லாம். வழக்கு அல்­லது நடு­வர் மன்­றம் என்று சென்­றால் வணிக உற­வு­கள் சீர்­கெ­ட­லாம் என்­றார் அவர்.

மாநாட்­டில் உரையாற்றிய சட்ட, உள்­துறை அமைச்­சர் கா சண்­மு­கம், அதி­க­ரித்து வரும் புவி­சார் அர­சி­யல் பதற்றங்­கள், விநி­யோகச் சங்­கிலி இடை­யூ­று­க­ளால், ஒரு தகுந்த சர்ச்சைகளுக்கான தீர்வு கட்­ட­மைப்­புக்கு தேவை மேலும் அதிகரித்துள்ளது என்றார்.

இந்­நி­லை­யில், சம­ர­சம் குறித்த சிங்­கப்­பூர் மாநாடு மேலும் முக்­கி­யத்­து­வம் பெறு­கிறது என்றார் அவர்.

பல­த­ரப்பு ஒப்­பந்­தம் 2020ஆம் ஆண்டு செப்­டம்­ப­ரில் நடப்­புக்கு வந்­தது. இதில் மொத்­தம் 55 நாடு­கள் கையெ­ழுத்­திட்­டுள்­ளன. 10 நாடு­கள் இந்த உடன்­ப­டிக்­கைக்கு ஒப்­பு­தல் அளித்­துள்­ளன. இது நாடு­க­ளின் சம­ரச ஒப்­பந்­தங்­க­ளைச் செயல்­ப­டுத்­து­வதை எளி­தாக்­கு­கிறது. இந்த ஒப்­பந்­தம் இல்­லா­மல், ஒரு நாட்­டில் முடி­வான தீர்வு ஒப்­பந்­தம் மற்­றொரு நாட்­டில் எந்த சட்ட அதி­கா­ரத்­தை­யும் பெற்­றி­ருக் ­காது. அதைச் செயல்­ப­டுத்த கட்­சி­கள் நீதி­மன்­றம் செல்ல வேண்டும்.

ரஷ்ய-உக்­ரேன் போரும் கொவிட்-19 தொற்­று­நோ­யும் உல­கெங்­கி­லும் உள்ள வணி­கங்­களில் கடு­மை­யான பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன என்றார் திரு சண்­மு­கம்.

"அமெ­ரிக்கா, சீனா இடையே புவி­சார் பதற்­றம் நில­வும் வேளை­யில், வெளிப்­புற அதிர்ச்­சி­க­ளைத் தாங்க, பல நாடு­கள் மீள்­தி­ற­னுக்கு அதிக முக்­கி­யத்­து­வம் அளிக்கின்­றன. இது உள்­நோக்கி திரும்­பு­வ­தா­க­வும் உள்­ளது.

"இது மோச­மான நிச்­ச­ய­மற்ற சூழல். உல­க­ம­ய­மாக்­கல் பின்­ன­டை­வைக் கண்­டி­ருப்­பதும் வெளிப்­படை," என்­றார் திரு சண்­மு­கம்.

"ஒத்­து­ழைப்­பைக் கட்­டிக்­காக்­க­வும், உலக வணி­கச் சூழலை இயன்­ற­வரை ஆரோக்­கி­ய­மாக வைத்­தி­ருக்­க­வும், நாடு­கள் மேலும் கடி­ன­மாக உழைத்து ஒன்­றி­ணைய வேண்­டும்," என அவர் கூறி­னார்.

சம­ர­சம் பற்றி சிங்­கப்­பூர் மாநாட்­டில் மேலும் பல நாடு­கள் பங்­கேற்க வேண்­டும் என்று திரு சண்­மு­கம் அழைப்பு விடுத்­தார்.

"சம­ர­சம் ஒப்­பீட்­ட­ள­வில் வேக­மா­னது, மலி­வா­னது, மிக­வும் நீக்­குப்­போக்­கா­னது, வணிக உற­வு­களைப் பாது­காக்க உத­வு­கிறது. இன்­றைய சித­றிய நிலப்­ப­ரப்­பில் இன்­னும் முக்­கி­ய­மா­னது," என்று அமைச்­சர் சண்­மு­கம் குறிப்­பிட்­டார்.