சிங்கப்பூர் கலைப் பல்கலைக்கழகம் 2024 முதல் செயல்படும்

சிங்­கப்­பூர் கலைப் பல்­க­லைக்­க­ழ­கம் (யுஏ­எஸ்) எனப்­படும் புதிய பல்கலைக்­க­ழ­கம் 2024 ஆகஸ்ட் மாதம் திறக்­கப்­ப­டு­கிறது. லசால் கலைக் கல்­லூரி, நன்­யாங் நுண்­கலைக் கல்­லூரி (நாஃபா) ஆகி­ய­இரண்டின் கூட்டணியில் யுஏஎஸ் அமைகிறது. அடுத்த ஆண்டு மூன்­றாம் காலாண்­டில் பல்­க­லைக்­க­ழ­கம் மாண­வர் சேர்க்கை விண்­ணப்­பங்­க­ளைப் பெறத் தொடங்­கும்.

கல்வி அமைச்சு, லசால், நாஃபா ஆகி­யவை இணைந்து நேற்று வெளி­யிட்ட கூட்­ட­றிக்கை இந்த விவரங்களைத் தெரி­வித்­தது.

நுண்­கலை, இசை போன்ற துறை­களில் யுஏ­எஸ் பட்­டங்­களை வழங்­கும். புகழ்­பெற்ற பிரிட்­டிஷ் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளு­டன் இணைந்து பட்டப் படிப்புகளை வழங்­கும் லசால், நாஃபா ஆகி­ய­வற்­றின் தற்­போ­தைய செயல்­முறை முடி­வுக்கு வரும்.

லசால், 2012ஆம் ஆண்டு முதல் லண்­ட­னின் கோல்ட்ஸ்­மித்ஸ் பல்­க­லைக்­க­ழ­கத்­து­டன் இணைந்து பட்டப் படிப்புகளை வழங்­கு­கிறது. நாஃபா, 2011இல் பிரிட்­ட­னின் ராயல் காலேஜ் ஆஃப் மியூ­சிக்­கு­ட­னும் கடந்த ஆண்டு ஜன­வ­ரி­யில் லண்­டன் கலைப் பல்­க­லைக்­க­ழ­கத்­து­டன் இதே­போன்ற ஏற்­பா­டு­களை தொடங்­கி­யது.

இந்­தத் திட்­டங்­க­ளின் கீழ் சேரும் மாண­வர்­க­ளின் கடை­சிப் பிரி­வி­னர் 2023இல் லசா­லி­லும் 2025 இல் நாஃபாவி­லும் சேர்­வார்­கள். எனி­னும் இக்கல்லூரிகளின் மாண­வர் பரி­மாற்­றத் திட்­டங்­களும் கூட்டு கல்­வித் திட்­டங்­களும் தொட­ரும்.

அதன்­பின்­னர், இரு நிறு­வ­னங்­களி­லும் பயி­லும் மாண­வர்­கள் யுஏ­எஸ்-நாஃபா அல்­லது யுஏ­எஸ்-லசால் என்ற பெய­ரில் யுஏ­எஸ் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் பட்­டங்­க­ளைப் பெறு­வார்­கள்.

கடந்த ஆண்டு வர­வு­செ­ல­வுத் திட்ட விவா­தத்­தில் அப்போதைய கல்வி அமைச்­சர் லாரன்ஸ் வோங் அறிவித்த இந்த புதிய பல்­க­லைக்­க­ழ­கம், உத்­த­ர­வா­தத்­தால் வரை­ய­றுக்­கப்­பட்ட நிறு­வ­ன­மாக இருக்­கும். மேலும் அரசு மானி­யத்­து­டன் கூடிய பட்­ட­யப் படிப்பு, பட்­டப் படிப்­பு­க­ளைத் தொடர்ந்து வழங்­கும் என்று கல்வி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

மிடில் ரோட்­டில் உள்ள தேசிய வடி­வ­மைப்பு மையத்­தில் யுஏ­எஸ் செயல்­படும். பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு புதிய வளா­கம் இருக்­காது.

லசால், நாஃபா ஆகிய இரண்­டிற்­கும் யுஏ­எஸ் சில மையப்­ப­டுத்­தப்­பட்ட சேவை­களை வழங்­கும். அவை தனித்­தனி நிறு­வ­னங்­க­ளாகவே தொடர்ந்து இருக்­கும். மாண­வர் சேர்ப்பு, பாடத்­திட்­டங்­களில் அவை சுயேட்­சை­யா­கச் செயல்­படும். எனி­னும் இரண்­டி­லும் சில பாடத்­திட்­டங்­க­ளைப் படிக்­கும் வசதி இருக்­கும்.

லசால், நாஃபா இரண்­டும் புதிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் மேற்­பார்­வை­யில், தனித்­த­னி­யாக செயல்­படும் இந்த முறை இக்­கல்­லூ­ரி­களை மேம்­ப­டுத்­து­வ­து­டன் அவற்­றின் தனித்­தன்­மை­யை­யும் பாரம்­ப­ரி­யங்­க­ளை­யும் பேண உத­வும் என அமைச்சு கூறி­யது.

நாஃபா 1938இலும், லாசல் 1984இலும் நிறு­வப்­பட்­டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!