ஜூரோங் பறவைப் பூங்கா மூடப்படுகிறது; பறவைகள் மண்டாயில் குடியேறும்

2 mins read
edd1b312-286a-416f-929e-16a91f4dc916
-

ஜூரோங் பறவைப் பூங்கா, மாண்­டாய் வன­வி­லங்கு காப்­ப­கத்­திற்கு அடுத்த ஆண்­டுத் தொடக்­கத்­தில் இடம்­மா­று­வ­தை­யொட்டி, வரும் 2023 ஜன­வரி 3ஆம் தேதி அது மூடப்­ப­டு­கிறது.

கடந்த 1971ஆம் ஆண்டு ஜன­வரி 3ஆம் தேதி திறக்­கப்­பட்ட 20 ஹெக்­டர் பரப்­ப­ள­வுள்ள ஜூரோங் பூங்கா, 52வது ஆண்­டில் அதன் செயல்­பா­டு­களை முடித்­துக்­கொள்­கிறது. அதன்­பி­றகு பூங்­கா­வின் ஊழி­யர்­களும் ஏறக்­கு­றைய 3,500 பற­வை­களும் புதிய இடத்­துக்கு மாற ஆயத்­த­மா­வார்­கள் என்று மண்­டாய் வன­வி­லங்கு குழுமம் நேற்று ​​தெரிவித்தது.

மண்டாயில், சிங்­கப்­பூர் விலங்­கி­யல் தோட்­டம், ரிவர் சஃபாரி, நைட் சஃபாரி, புதிய மழைக்­காடு, பனியன் ட்ரீ ஹோட்­டல்­கள் & ரிசார்ட்­ஸால் இயக்­கப்­படும் புதிய விடுதி ஆகி­ய­வற்­று­டன் புதிய பற­வை­கள் காப்பகமும் இணை­கிறது.

புதிய காப்­ப­கம் பற்­றிய அறி­விப்­பு­கள் பின்­னர் பகி­ரப்­படும் என்று மண்­டாய் வன­வி­லங்கு குழு­மம் கூறி­யது. மண்­டாய் வன­வி­லங்கு காப்­ப­கத்­தின் ஏனைய புதிய இடங்­கள் 2024ஆம் ஆண்­டுக்­குள் கட்டி­மு­டிக்­கத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளன.

ஜூரோங்­ பற­வைப் பூங்கா மூடப்­ ப­ட­வுள்­ளதை ஒட்டி பல நிகழ்ச்சி கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ளன.

பூங்­கா­வின் வர­லாற்­றின் முக்­கிய மைல்­கற்­க­ளைச் சித்­தி­ரிக்­கும் மர­பு­டை­மைப் பாதை­யில் பூங்­கா­வின் மர­பு­டை­மைச் சிறப்­பு­க­ளை ரசிக்­க­லாம். நவம்­பர் முதல், அனு­ப­வ­மிக்க வழி­காட்­டி­கள் பூங்­கா­வின் பற­வை­கள், அதன் வடி­வ­மைப்பு பற்­றி பகிர்ந்துகொள்­வார்­கள்.

அக்­டோ­பர் 19 முதல் சுற்­று­லா­வுக்கு பதி­வு­செய்­ய­லாம்.

நவம்­ப­ரில் தள்­ளு­வண்­டி உணவு­ க­ளை­யும் கொண்­டாட்ட நட­வ­டிக்­கை­களையும் ரசிக்­க­லாம்.

பூங்­கா­வில் 1992 முதல் 2012 வரை செயல்­பட்ட மோனோ­ர­யில் இலகு ரயில் சேவை மீண்­டும் திறக்­கப்­பட்­டுள்­ளது. பூங்­கா­வின் பழைய குக்கூ மணிக்­கூண்டு மீண்­டும் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

ஜூரோங் பற­வைப் பூங்­கா­வின் துணைத் தலை­வர் டெய்சி லிங், 1982இல் அங்கு கல்வி அதி­கா­ரி­யா­கப் பணி­பு­ரி­யத் தொடங்­கி­னார்.

"பூங்­கா­வின் தொடக்க காலத்­தி­லி­ருந்து இங்கு பணி­பு­ரி­ப­வர்­கள் பலர் உள்­ள­னர். நாங்­கள் புதிய அத்­தி­யா­யத்தை தொடங்­கு­வ­தற்­கு­முன், பூங்­கா­வின் இந்­தக் கொண்­டாட்­டத்­தில் பொது­மக்­களும் இணை­ய­லாம்," என்­றார் அவர்.

மேலும் சில நிகழ்ச்­சி­கள் வரும் நாள்­களில் அறி­விக்­கப்­படும்.

பூங்கா வியா­ழன் முதல் ஞாயிறு வரை திறந்­தி­ருக்­கும், அதே­போல் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பொது விடு­முறை நாள்­க­ளி­லும், காலை 8.30 முதல் மாலை 6 மணி வரை திறந்­தி­ருக்­கும்.

பூங்­கா­வின் மூடு­விழா குறித்த மேல் விவரங்களை https://www.mandai.com/en/jurong-bird-park/things-to-dowhats-on/a-flight-to-remember.html என்ற இணை­யத்­தளத்­தில் காண­லாம்.