வேலை மோசடியில் $781,000 பறிபோனது

வேலை மோசடியில் $781,000 பறிபோனது

2 mins read
eda0fc1d-789a-4345-9740-51d6e9448e9c
-

செய­லி­க­ளின் தரத்தை நிர்­ணயிக்கும் வேலை எனக்கூறி குறைந்­தது 43 பேரி­டம் மோசடி செய்­யப்­பட்டு கிட்­டத்­தட்ட $781,000 பணம் பறிக்­கப்­பட்­டது.

கடந்த ஏப்­ரல் மாதம் முதல் இந்த மோசடி வேலை நடை­பெற்­றுள்­ளது. அண்­மை­யில் வெளி­யி­டப்­பட்ட அரை­யாண்டு குற்­றப் புள்­ளி­வி­வ­ரங்­க­ளின்­படி வேலை தொடர்­பான மோச­டி­யில் $58 மில்­லி­யன் பணம் இழக்­கப்­பட்­டது.

தற்­போ­து மோச­டிக்­கா­ரர்­கள் பொது­மக்­களை வாட்ஸ்அப் போன்ற இணைய தக­வல் தொடர்பு செய­லி­கள் வழி தொடர்புகொள்வர். திறன்­பேசி செய­லி­களைத் தர­வ­ரி­சைப்­ப­டுத்­தும் வேலைக்­குப் பணம் கொடுக்­கப்­படும் எனக் கூறுவர். அந்த வேலையை ஏற்­ற­வு­டன் ஓர் இணைய இணைப்பு மூலம் ஒரு கணக்கை உரு­வாக்­க­வேண்­டும். அந்­தக் கணக்­கில் தெரி­யாத நபர்­களி­ட­மி­ருந்து பணம் போடப்­படும்.

ஏமாற்­றப்­பட்­ட­வர்­க­ளின் கணக்­கில் கிரிப்­டோ­க­ரன்சி எனும் மின்­னி­லக்க பணம் தெரிந்­த­வு­டன் அவர்­கள் செய­லி­க­ளைத் தர­வ­ரி­சைப்­ப­டுத்­தத் தொடங்­கு­வர்.

ஒவ்­வொரு செய­லி­யை­யும் தர­வ­ரி­சைப்­ப­டுத்த அந்த கிரிப்­டோ­கரன்சி பணத்­தைப் பயன்­ப­டுத்­த­வேண்­டும். அந்த மின்­னி­லக்­கப் பணம் முடிய முடிய இணைய கணக்கில் மீண்­டும் பணம் நிரப்ப வேண்டும்.

முத­லில் செய்த வேலைக்கு கணக்­கில் இருந்து ப­ணத்தை எடுக்க முடிந்­தது. ஆனால் போகப்­போக அந்த கணக்­கில் பணத்தை எடுக்க முடி­ய­வில்லை.

இது­போன்று ஏமா­றா­மல் இருக்க பொது­மக்­கள் சந்­தே­கத்­துக்­கு­ரிய வேலை­களை ஏற்­க­வேண்­டாம் என்­றும் தெரி­யா­த­வர்­க­ளி­டம் பண­மும் பெற்­றுக்­கொள்­ள­வேண்­டாம் என்­றும் காவல் துறை­யினர் கேட்­டுக்­கொள்­கின்­ற­னர்.

இந்த ஆண்டு இது­வரை 14,349 மோசடி வழக்­கு­கள் பதி­வா­கின. இது கடந்த ஆண்டு இதே காலக்­கட்­டத்­தில் பதி­வான 7,746 வழக்­கு­க­ளை­விட இரு மடங்கு அதி­கம்

இவ்­வாண்­டின் முதல் பாதி­யில் மட்­டும் மொத்­தம் $346.5 மில்­லி­யன் மோச­டி இழப்­பு­கள் ஏற்­பட்­டன.

இது கடந்த முழு ஆண்­டும் இழக்­கப்­பட்ட $633.3 மில்­லி­ய­னை­விட அதிகம்.

மோசடி குறித்த தக­வல்­கள் அளிக்க காவல் துறை­யின் 1800-255-000 எண்­ணு­டன் தொடர்­பு­கொள்­ள­லாம்.

மோச­டி­கள் குறித்த தக­வல்­கள் பெற 1800-722-6688 எண்­ணு­டன் தொடர்­பு­கொள்­ள­லாம்.