சிங்கப்பூர் பாகிஸ்தானுக்கு $69,000 நன்கொடை வழங்குகிறது

சிங்கப்பூர் பாகிஸ்தானுக்கு $69,000 நன்கொடை வழங்குகிறது

1 mins read
3ba72b50-2c1e-4cde-98fa-80fe117e6a2d
-

பாகிஸ்தான் வெள்ள நிவாரணத்துக்கு சிங்கப்பூர் அரசாங்கம் $69,700 நன்கொடை வழங்கும். சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்துக்கு நிதி அளிக்கப்படும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, குடிநீர், தற்காலிக கூடாரங்கள் போன்றவற்றை அளிக்க நன்கொடை பயன்படுத்தப்படும்.

பாகிஸ்தான் வெள்ளத்தில் பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 3 மாதங்களால் அங்கு கனத்த மழை பெய்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத இந்த மழைப்பொழிவால் பாகிஸ்தானின் பல நகரங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ள பாதிப்பால் பாகிஸ்தானில் தேசிய அவசர நிலையை அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் வெள்ள நிவாரணத்துக்கு நன்கொடை வழங்க விரும்புவோர் நவம்பர் 30ஆம் தேதிவரை செய்யலாம். நன்கொடை வழங்க இந்த இணையப்பக்கத்தை நாடவும்.