செந்தோசாவுக்கு இலவச அனுமதி

செந்தோசாவுக்கு இலவச அனுமதி

1 mins read
b1236239-3282-4737-b390-14d93a0f3db5
படம்: செந்தோசா பேல்புக் பக்கம் -

செந்தோசாவுக்கு ஆண்டு இறுதிவரை இலவசமாக நுழையலாம். டிசம்பர் 31 வரை இந்த சலுகை நீடிக்கும்.

ஆறாவது முறையாக செந்தோசா இந்த சலுகையை நடத்துகிறது. செந்தோசாவுக்கு இலவசமாக நுழைய விரும்புவோர் இந்த வழிகளில் தீவுக்கு செல்லலாம்: செந்தோசா எக்ஸ்பிராஸ் இந்த பேருந்தை சேவையை பயன்படுத்த விரும்புவோர் தங்கள் ஈஸி லிங் அட்டையை தட்டினால் இலவசமாக செந்தோசாவுக்கு செல்லலாம். இந்த சேவை தினந்தோறும் காலை 7 மணியிலிருந்து நள்ளிரவு வரை செயல்படுகிறது.

சொந்த வாகனம் ஓட்டிசெல்பவர்கள் ஐயு' கருவி பொருத்தப்பட்டுள்ள அனைத்து சிங்கப்பூர் வாகனங்களும் தீவுக்கு இலவசமாக ஓட்டிச்செல்ல முடியும். ஆனால் மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி இல்லை.

நடை/சைக்கிள் தீவுக்கு நடந்து செல்பவர்களும் சைக்கிள் ஒட்டிசெல்பவர்களும் கட்டணம் செலுத்த தேவையில்லை.