சைக்கிளோட்டிகளுக்காகவே ஞாயிறு காலையில் ஒரு தடம்

சைக்கிளோட்டிகளுக்காகவே ஞாயிறு காலையில் ஒரு தடம்

1 mins read
2d3920f7-85cd-4183-8aa3-7ae2f94d5533
சிலேத்தார் வெஸ்ட் கேம்ப் ரோடு நெடுகிலும் சைக்கிளோட்டிகளுக்காகவே ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில் ஒரு தடம் ஒதுக்கப்படும். இந்த ஏற்பாடு ஆறுமாத காலம் பரிசோதிக்கப்படும். படம்: கூகல் வரைபடம் -

சிலேத்­தா­ரில் உள்ள வெஸ்ட் கேம்ப் ரோடு நெடு­கி­லும் ஒரு தடம் சைக்­கி­ளோட்­டி­க­ளுக்­காகவே ஞாயிற்­றுக்­கி­ழமைகளில் காலை நேரத்­தில் ஒதுக்­கப்­படும்.

அக்­டோ­பர் 16ஆம் தேதி முதல் அத்தடத்­தில் சைக்­கி­ளோட்­டி­கள் செல்­ல­லாம்.

அந்­தத் தடம் ஒவ்­வொரு ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யும் அதி­காலை 5 மணி முதல் முற்­ப­கல் 11 மணி வரை சைக்­கி­ளோட்­டி­க­ளுக்­கா­கவே ஒதுக்­கப்­படும்.

இந்த ஏற்­பாடு ஆறுமாத காலம் பரி­சோ­திக்­கப்­படும் என்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது.

அந்­தத் தடம் அந்­தச் சாலை­யின் இரு திசை­க­ளி­லும் செல்­லும். நீல­நி­றத்­தில் எடுப்­பாக கோடு­கள் வரை­யப்­பட்டு இருக்­கும். ஞாயி­று­களில் காலை 5 மணி முதல் முற்­ப­கல் 11 மணி வரை அத்­த­டத்­தைப் பேருந்­து­கள், சைக்கி­ளோட்­டி­கள் மட்­டும்­தான் பயன்­ப­டுத்த முடி­யும்.

சைக்­கி­ளோட்­டி­கள் 10 பேருக்­கும் மேற்­பட்ட குழு­வி­ன­ராக சைக்­கி­ளோட்­டிச் செல்­ல­லாம்.

அந்­தக் குறிப்­பிட்ட நேரத்­தில் கார்­களும் தனி­ந­பர் நட­மாட்­டச் சாத­னங்­களும் அந்­தத் தடத்­தைப் பயன்­ப­டுத்த முடி­யாது.

போக்­கு­வ­ரத்து அமைச்­சின் வர­வு­செ­ல­வுத் திட்ட விவா­தம் கடந்த மார்ச் மாதம் நாடா­ளு­மன்­றத்­தில் நடந்­தது. போக்கு­வ­ரத்­துக்­கான மூத்த நாடாளு­மன்­றச் செய­லா­ளர் பே யாம் கெங், சிலேத்­தா­ரில் சைக்­கி­ளோட்­டி­களுக்­கா­க ஒரு தடம் ஒதுக்­கப்­பட்டு பரி­சோ­திக்­கப்­படும் என்­று அப்­போது கூறினார்.

அதி­கம் பேர் சேர்ந்து சைக்­கி­ளோட்­டிச் செல்ல வேண்­டு­மென்று விருப்­பம் தெரி­விக்­கப்­பட்­ட­தால் 10 பேர் வரை அனு­மதிக்­கப்­ப­டு­வர் என்றாரவர்.