அமைச்சர்: நெருக்கடியில் அமைதியாக இருப்பது அனுகூலம்

பொருள், சேவை வழங்­கீட்டு கட்­டமைப்பு பிரச்­சி­னைக்கு உள்­ளா­கும்­போது மக்­கள் அமை­தி­யாக இருக்­க­வேண்­டும்.

அந்­தச் சூழ்­நி­லைக்கு ஏற்ப மாறிக்­கொள்­ப­வர்­க­ளாக அவர்கள் இருக்க வேண்­டும்.

இப்­படி இருந்­தால் தனக்கு வேண்­டிய பொருள்­களை நாடு இறக்­கு­மதி செய்­யும்­போது அதிக அனு­கூ­லங்­கள் கிடைக்­கும் என்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்து இருக்­கி­றார்.

நெருக்­கடி நேரத்­தின்­போது நாம் பொறு­மை­யாக, அமை­தி­யாக இருந்­தால் நமக்கு வேண்­டிய பொருள்­கள் கட்­டுப்­ப­டி­யா­கக்கூடிய விலை­யில் நமக்குக் கிடைக்க நல்ல வாய்ப்பு கிட்­டும் என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தா­ளுக்கு அளித்த பேட்­டி­யில் அவர் தெரி­வித்­தார். அப்பேட்டி நேற்று ஒலி­ப­ரப்­பா­னது.

நெருக்­கடி காலத்­தில் நாம் பீதி அடைந்­து­விட்­ட­தாக மற்­ற­வர்­கள் நினைத்­தால், அவர்­கள் விலை­களை ஏற்­றி­வி­டு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் அதி­கம் என்றார் அவர்.

"அண்­மை­யில் பொருள், சேவை வழங்­கீட்டுக் கட்­ட­மைப்பு பாதிக்­கப்­பட்­ட­போது, சிங்­கப்­பூ­ரர்­கள் அமை­தி­யாக, நில­வ­ரத்தை உணர்ந்து நடந்­து­கொண்­டார்­கள்.

"இத­னால் நமக்கு நல்ல அனு­கூ­லம் ஏற்­பட்­டது. இது நமக்கு பெருமை தரு­வ­தாக இருக்­கிறது," என்று அவர் தெரி­வித்­தார்.

கிடைப்­பதை வைத்து அதற்­கேற்ப நாம் நீக்­குப்­போக்­காக நடந்து கொள்­வ­தும் உத­வும் என்று அவர் தெரி­வித்­தார்.

"நாம் விரும்­பும் உண­வுப்­பொருள் கிடைக்­க­வில்லை என்­றால், வேறு பொரு­ளுக்கு மாறிக்கொள்வது நல்­லது," என்­றாரவர்.

பொருள், சேவை விநி­யோ­கக் கட்­ட­மைப்­பில் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்பு­க­ளைச் சமா­ளிக்க சிங்­கப்பூர் மூன்று உத்­தி­களை அமல்­ப­டுத்­து­கிறது.

இறக்­கு­ம­தி­க­ளைப் பல­மு­னைப்­படுத்­து­வது, உள்­நாட்டு உற்­பத்தி ஆற்­ற­லைப் பெருக்­கு­வது, பொருள்­களை அதி­கம் இருப்பு வைப்­பது ஆகிய அந்த மூன்று உத்­தி­களை அர­சாங்­கம் தொடர்ந்து கடைப்­பிடிக்­கும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!