பாகிஸ்தானில் பல பகுதிகளில் பெரும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த நாட்டுக்கு உதவுவதற்காக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் பொது நிதித் திரட்டு முயற்சியைத் தொடங்கி இருக்கிறது.
அந்த முயற்சிக்கு ஆதரவாக சிங்கப்பூர் அரசாங்கம் US$50,000 ஆதார நிதியாக வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கு உதவ உடனடி யாக தேவைப்படும் உதவிகளைச் செய்வதற்காக இந்தச் சங்கம் ஏற்கெனவே $50,000 உறுதி தெரி வித்துள்ளது.
பாகிஸ்தானில் ஜூன் மாதம் முதல் இடைவிடாத பலத்த மழை காரணமாக அந்த நாட்டில் மூன்றில் ஒரு பகுதி பாதிக்கப்பட்டு உள்ளது. 1,100க்கும் மேற்பட்ட மக்கள் மாண்டுவிட்டனர்.
ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்துவிட்டன. 33 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உதவ அதிகாரிகள் போராடி வருகிறார்கள். பல சாலை களும் பாலங்களும் உடைந்துவிட்டதால் பல பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் அதிகாரிகள் தவிக்கிறார்கள்.
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடிநீர் இல்லை. தங்க இடமில்லை. சரியான சாப்பாடும் இல்லை. இந்த நிலையில் தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் தலைதூக்கும் ஆபத்து அதிகரித்து வருகிறது என்று சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமை நிர்வாகி பெஞ்சமின் வில்லியம் திங்கட்கிழமை அறிக்கையில் தெரிவித்தார்.
இந்தச் சங்கம் நவம்பர் 30 ஆம் தேதி வரை நிதி திரட்டும்.
கொடை வழங்க விரும்புவோர் https://redcross.sg/media-centre/press-releases/1187-monsoon-floods-in-pakistan-singapore-red-cross-commits-s-50-000-for-survivors-and-affected-communities.html என்ற இந்த தளத்திற்குச் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

