ஆசியா தொடர்ந்து செழிக்க நிலைப்பாடு மிகவும் முக்கியம்; உச்சநிலை மாநாட்டில் ஹெங் சுவீ கியட் வலியுறுத்து

ஆசியா தொடர்ந்து செழிக்க நிலைப்பாடு மிகவும் முக்கியம்; உச்சநிலை மாநாட்டில் ஹெங் சுவீ கியட் வலியுறுத்து

2 mins read
b182a3a4-a360-4a21-983a-a20296a89e96
-

சீனா­வின் உல­க­ளா­விய உள்­கட்­டமைப்பு மேம்­பாட்டு உத்­தித் திட்டம் ஆசி­யா­வின் எதிர்­கா­லத்­தில் முக்­கி­ய­மான இடத்­தைப் பிடித்துள்­ளது.

ஆனா­லும் வட்டார அமைதி சங்­கடத்­திற்கு உள்­ளாகி இருக்­கிறது என்று துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் தெரி­வித்து இருக்­கி­றார்.

ஆகை­யால் கடந்த பல ஆண்டுக் கால­மாக இந்த வட்­டா­ரம் செழிப்­படைய உதவி வந்­துள்ள நிலைப்­பாட்­டைக் கட்­டிக்­காப்­பது முக்­கி­ய­மா­னது என்று அவர் வலி­யு­றுத்தி இருக்­கி­றார்.

சீனா­வின் அந்த உத்­தித்­திட்­டத்­தின் 7வது உச்­ச­நி­லைக் கூட்டம் புதன்­கி­ழமை ஹாங்­காங்­கில் நடந்தது. அதில் திரு ஹெங் உரை­யாற்­றி­னார். இப்­போது இருப்­ப­தை­விட இன்னும் சிறந்த உள் கட்­ட­மைப்பு வச­தி­களும் மேலும் ஒருங்­கி­ணைந்த வட்­டா­ர­மும் கைகூடி வர­வேண்­டு­மா­னால் அது நிலைப்­பாட்­டைப் பொறுத்தே இருக்­கிறது என்று அவர் தெரிவித்­தார்.

பல பத்­தாண்டு கால­மாக இந்த வட்­டா­ரம் நிலைப்­பாட்டை அனு­பவித்து வந்­துள்­ளது, அதில் ஆசியான் ஆக்­க­க­ர­மான பங்­காற்றி வந்­துள்­ளது. ஆனால் இப்­போது பதற்­றம் அதி­க­ரித்­து­விட்­டது என்று துணைப் பிர­த­மர் தெரி­வித்­தார்.

தைவான் நீரிணை, தென் சீனக் கடல், கொரிய தீப­கற்­பம் ஆகி­யவை உள்­ளிட்ட முக்­கி­ய­மான பகு­தி­களில் சூழ்­நிலை பதற்­ற­மாக இருப்­பதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

ஆசி­யா­வில் அமைதி சீர்­குலைந்து­வி­டக்கூடிய ஆபத்து இப்­போது முன்­பை­விட அதி­க­மாக இருக்­கிறது என்று கூறிய பொருளி­யல் கொள்­கைக்­கான ஒருங்­கிணைப்பு அமைச்­ச­ரு­மான திரு ஹெங், யாருமே போரை விரும்­ப­வில்லை என்று தெரி­வித்­தார்.

இருந்­தா­லும் நம்­பிக்கை இல்லாத ஒரு நிலையில், உத்­தி­பூர்வ போட்டி தீவி­ர­ம­டைந்து தவ­றான கணக்­கீடு­க­ளின் அடிப்­ப­டை­யில் அமைதி நொறுங்­கி­வி­டக்­கூ­டிய ஆபத்து இருக்­கிறது என்று கூறிய திரு ஹெங், அத்­த­கைய ஒரு எதிர்­காலத்­தில் இருந்து நாம் விலகி இருக்க வேண்­டும் என்று வலி­யுறுத்­தி­னார்.

எல்லா தரப்­பு­க­ளுமே ஒரு படி பின்னே சென்று பதற்­றத்தை தணித்­துக்­கொள்ள முன்­வர வேண்­டும் என்று அவர் அழைப்பு விடுத்­தார்.

அதா­வது, இந்த வட்­டா­ரத்தை திறந்த நிலை­யில் வைத்­தி­ருந்து, எல்­லா­ரை­யும் உள்­ள­டக்­கக்­கூ­டிய சூழலை நிலைப்­ப­டுத்தி, பேச்­சு­வார்த்­தைக்­கான ஆக்­க­க­ர­மான வழி­களை எப்­போ­துமே திறந்­து­வைத்து, ஒத்­து­ழைப்­புக்­கான பொது­வான அடித்­தளங்­களை அடை­யா­ளம் காண வேண்­டும் என்­பதே இதன் பொருள் என்று திரு ஹெங் கூறி­னார்.

'புதிய அத்­தி­யா­யம்: ஒத்­து­ழைப்­பும் புத்­தாக்­க­மும்' என்ற கருப்­பொருளு­டன் இந்த ஆண்­டில் உச்­ச­நிலை மாநாடு நடந்­தது.