'டுரூத் வாரி­யர்ஸ்' இணையத் தளத்திற்கு நிபந்தனை எச்சரிக்கை

1 mins read
2f7c6c52-8461-44f6-9003-f8d621b7aaa9
-

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தில் கொரோனா வுக்கு எதி­ரான தடுப்­பூசி­கள் ஆற்றல்­மிக்­கவை அல்ல என்ற கருத்து மக்­க­ளிடம் ஏற்­படும் வகையில் பொய்­யான செய்­தி­களை வெளி­யிட்­ட­தற்­காக 'டுரூத் வாரி­யர்ஸ்' என்ற இணை­யத் தள நிர்­வா­கிக்கு 'போஃப்மா' அலு­வ­ல­கம் நிபந்­த­னை­யு­டன் கூடிய எச்­ச­ரிக்கை­யைப் பிறப்­பித்து இருக்­கிறது.

அந்தத் தளத்­தில் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளி­யிடப்­பட்ட இரண்டு கட்­டு­ரை­களுக்காக அந்த எச்­ச­ரிக்கை செவ்­வாய்க்­கி­ழமை பிறப்­பிக்­கப்­பட்­டது.

அந்த இணை­யத் தளத்தை நிர்­வ­கிப்­ப­வர் 47 வயது மாது. அவ­ருக்கு 12 மாத நிபந்­தனை எச்­ச­ரிக்­கை பிறப்­பிக்­கப்­பட்டு இருக்­கிறது என்று அந்த அலு­வ­ல­கம் நேற்று அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தது.

தவ­றான செய்­தி­கள் வெளி­யாகி­விட்­ட­தாக சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்­தும் வகை­யில் அந்த இணை­யத்தளத்­தில் திருத்த அறி­விப்­பு­கள் வெளி­யாக வேண்­டும் என்று சென்ற ஆண்டு அக்­டோ­பர் 24ஆம் தேதி அந்த மாதுக்கு உத்­தரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

அடுத்த 12 மாத காலத்­தில் மீண்டும் அந்த மாது தவறு செய்தால் முந்­தைய குற்­றத்­திற்­காக அவர் மீது வழக்­குத் தொடுக்க முடி­யும் என்பதை அறிக்கை சுட்டிக்காட்டியது.