‘மின்னிலக்க நாணயம் தொடர்பில் கூடுதல் கட்டுப்பாடுகள் தேவை’

'கிரிப்டோ கரன்சி' எனப்­படும் மின்­னி­லக்க நாண­யத்­தில் முத­லீடு செய்­வ­தற்கு ஆக முக்­கி­யத் தடை­யாக விளங்­கு­வது அதன் தொடர்­பில் முறை­யான விதி­கள் இல்­லா­மையே என்று சிங்­கப்­பூர் முத­லீட்­டா­ளர்­கள் கூறி­யுள்­ள­னர்.

உல­க­ள­வில் நடத்­தப்­பட்ட கருத்­தாய்­வில் இந்­தக் கருத்து முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு கரு­து­வோ­ரின் பட்­டி­ய­லில் முத­லி­டம் வகிக்­கின்­ற­னர் சிங்­கப்­பூ­ரர்­கள்.

கருத்­தாய்­வில் சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த, தனிப்­பட்ட முறை­யில் இயங்­கும் 1,004 முத­லீட்­டா­ளர்­கள் கலந்­து­கொண்­ட­னர். இவர்­களில் 37 விழுக்­காட்­டி­னர் முறை­யான விதி­கள் இல்­லா­த­தால் முத­லீடு செய்­யத் தயங்­கு­வ­தைச் சுட்­டி­னர்.

லக்­சம்­பெர்க்­கைத் தள­மா­கக் கொண்டு இயங்­கும் 'பிட்ஸ்­டேம்ப்' அமைப்பு, 16 வய­துக்கு மேற்­பட்ட முத­லீட்­டா­ளர்­க­ளி­டம் இந்­தக் கருத்­தாய்வை நடத்­தி­யது. ஹாங்­காங், ஸ்பெ­யின் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த இத்­த­கைய 34 விழுக்­காட்­டி­னர் விதி­மு­றை­கள் இல்­லா­த­தைக் கார­ண­மா­கக் கூறி­னர். அவர்­களை­ய­டுத்து, இத்­தா­லி­யைச் சேர்ந்த 32 விழுக்­காட்­டி­னர் இதே கருத்­தைக் கூறி­னர்.

நிறு­வன முத­லீட்­டா­ளர்­க­ளி­லும் சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த் ஆக அதி­க­மா­னோர் இவ்­வாறு கருத்­து­ரைத்­துள்­ள­னர்.

சிங்­கப்­பூ­ரின் 32 விழுக்­காட்டு நிறு­வன முத­லீட்­டா­ளர்­கள், மின்­னி­லக்க நாண­யம் தொடர்­பில் போதிய விதி­மு­றை­கள் இல்லை என்­ப­தைக் குறிப்­பிட்­ட­னர்.

ஆஸ்­தி­ரே­லியா, கனடா, ஹாங்­காங், ஜப்­பான், அமெ­ரிக்கா, தென்­னாப்­பி­ரிக்கா போன்ற 23 பகு­தி­களைச் சேர்ந்­தோ­ரி­ட­மும் இந்­தக் கருத்­தாய்வு நடத்­தப்­பட்­டது. இதில் தனிப்­பட்ட முத­லீட்­டா­ளர்­கள், நிறு­வன முத­லீட்­டா­ளர்­கள் என இரு தரப்­பி­லும் மொத்­தம் 28,000க்கும் அதி­க­மா­னோர் பங்­கு­பெற்­ற­னர்.

சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து 252 நிறு­வன முத­லீட்­டா­ளர்­கள் இதில் கலந்­து­கொண்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரின் தனிப்­பட்ட முத­லீட்டா­ளர்­களில் 53 விழுக்­காட்­டி­னர் மின்­னி­லக்க நாண­யத்­தில் முத­லீடு செய்­வ­தில் உள்ள மிக அதி­க­மான அபா­யத்­தைச் சுட்­டி­னர்.

ஏறக்­கு­றைய 56 விழுக்­காட்­டி­னர் மின்­னி­லக்க நாண­யம் நம்­ப­க­மா­னது என்றே தாங்­கள் நம்­பு­வ­தா­கத் தெரி­வித்­துள்­ள­னர்.

கருத்­து­ரைத்த தனிப்­பட்ட முத­லீட்­டா­ளர்­களில் பாதிக்­கும் மேற்­பட்­டோர் மின்­னி­லக்க நாணய முத­லீடு பற்றி அறிந்­து­வைத்­தி­ருப்­ப­தா­க­வும் அன்­றா­டம் அல்­லது வாரா­வா­ரம் இதில் முத­லீடு செய்­வ­தா­க­வும் கூறி­யுள்­ள­னர்.

கருத்­தாய்வு இந்த ஆண்டு மே மாத மத்­தி­யில் இருந்து ஜூன் மாதத் தொடக்­கம் வரை நடத்தப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!