மருந்தகங்களில் நோயாளிகள் சுயமாகப் பரிசோதனை செய்ய உதவும் 'ஆர்பி மெட்போட்'

மருந்தகங்களில் நோயாளிகள் சுயமாகப் பரிசோதனை செய்ய உதவும் 'ஆர்பி மெட்போட்'

1 mins read
31b206c1-7efb-4d8c-b062-456007cb4056
நோயாளியின் உடல் வெப்பநிலை, உயரம், எடை, ரத்த அழுத்தம், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு ஆகியவற்றை 'ஆர்பி மெட்போட்' சில நிமிடங்களில் அளந்துவிடும். படம்: சாவ்பாவ் -

உள்­ளூர்த் தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான 'ரிபப்­ளிக் பவர்', நோயா­ளி­கள் சுய­மாக சில முக்­கிய மருத்­து­வப் பரி­சோ­த­னை­க­ளைச் செய்­து­கொள்ள உத­வும் வகை­யில் 'ஆர்பி மெட்­போட்' எனும் கரு­வியை வடி­வ­மைத்­துள்­ளது.

இதன்­மூ­லம் ஒரு­வர் தனது உடல்­வெப்ப நிலை­யைக் கணக்­கி­ட­லாம். இதில் பொருத்­தப்­பட்­டி­ருக்­கும் ஓர் இயந்­தி­ரம் அவ­ரது ரத்த அழுத்­தத்தை அளக்­கும் வேளை­யில், உணர்­க­ரு­வி­கள் அவ­ரது உய­ரம், எடை போன்­ற­வற்­றைக் கணக்­கிட்­டு­வி­டும். ரத்­தத்­தில் இருக்­கும் ஆக்­சி­ஜன் அள­வை­யும் எளி­தாக அறிந்­து­கொள்ள முடி­யும். இத்­த­னை­யும் மருத்­து­வத் துறை ஊழி­யர்­க­ளின் உத­வி­யின்றி, சில நிமிட நேரத்­திற்­குள் கணக்­கி­டப்­பட்டு விடும் என்­ப­து­தான் இதன் சிறப்பு. மருந்­த­கங்­களில் இத்­த­கைய இயந்­தி­ரங்­கள் இருந்­தால் நோயா­ளி­கள் நீண்ட வரி­சை­யில் காத்­தி­ருக்­கும் நேரம் மிக­வும் குறை­யும் என்­பதை நிறு­வ­னம் சுட்­டி­யது.

வருங்­கா­லத்­தில் இத­யத் துடிப்­பைக் கணக்­கிட உத­வும் மின்­னி­லக்க 'ஸ்டெ­தொஸ்­கோப்' கரு­வி­யை­யும் இதில் இணைக்­கத் திட்­ட­மி­டப்­ப­டு­வ­தாக ரிபப்­ளிக் பவர் நிறு­வ­னம் கூறி­யது.

ஜூரோங், தெம்­ப­னிஸ் போன்ற இடங்­களில் பத்து 'ஆர்பி மெட்­போட்' கரு­வி­களை அமைப்­பது இதன் இலக்கு.

மலே­சியா, இந்­தோ­னீ­சியா ஆகி­ய­வற்­றி­லும் இந்­தக் கரு­வி­களை அறி­மு­கப்­ப­டுத்­தத் திட்­ட­ம் இ­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.