செப்டம்பர் பள்ளி விடுமுறையில் மலேசியா செல்லும் பாதையில் கூட்ட நெரிசல் ஏற்படக்கூடும்

செப்டம்பர் பள்ளி விடுமுறையில் மலேசியா செல்லும் பாதையில் கூட்ட நெரிசல் ஏற்படக்கூடும்

1 mins read
8c1a475f-f922-4282-8af9-141e34522791
-

பள்ளி விடு­முறை நாளை தொடங்­க­வி­ருக்­கிறது. இவ்­வே­ளை­யில் மலே­சி­யா­விற்­குச் செல்­லும் தரை­வ­ழிச் சாலை­களில் வாக­ன­மோட்­டி­கள் தாம­தத்­தை­யும் கூட்ட நெரி­ச­லை­யும் எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருக்­க­லாம் என்று குடி­நு­ழைவு, சோத­னைச் சாவ­டி­கள் ஆணை­யம் கூறி­யுள்­ளது.

உட்­லண்ட்ஸ், துவாஸ் ஆகிய இரு சோத­னைச் சாவ­டி­க­ளி­லும் தற்­போது போக்­கு­வ­ரத்து கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லுக்கு முன்­பி­ருந்த நிலை­யைப் படிப்­ப­டி­யாக எட்­டி­யி­ருப்­பதை ஆணை­யம் சுட்­டி­யது.

செப்­டம்­பர் பள்ளி விடு­மு­றை­யின்­போது மலே­சி­யா­விற்கு தரை­வழிப் பய­ணம் மேற்­கொள்­வோர் அதி­க­மான கூட்ட நெரி­சலை எதிர்­பார்த்து அதற்­கேற்ப பய­ணத் திட்­டத்தை அமைத்­துக்­கொள்­ளும்­படி நேற்று வெளி­யிட்ட ஆலோ­சனை அறிக்­கை­யில் அது குறிப்­பிட்­டுள்­ளது.

இதன் தொடர்­பில் பய­ணி­க­ளின் புரி­த­லை­யும் ஒத்­து­ழைப்­பை­யும் எதிர்­பார்ப்­ப­தாக ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது. பொறு­மை­யு­டன் போக்­கு­வ­ரத்து விதி­க­ளைக் கடைப்­பி­டித்து சோத­னைச் சாவ­டி­களில் பணி­யில் உள்ள அதி­கா­ரி­க­ளு­டன் ஒத்­து­ழைக்­கும்­படி அது கேட்­டுக்­கொண்­டது.

சென்ற மாதம் 26, 27, 28 ஆகிய வார­யி­றுதி நாள்­களில் இரு சோத­னைச் சாவ­டி­க­ளின் வழி­யா­க­வும் 313,000 பேர் பய­ணம் செய்­த­தாக ஆணை­யம் குறிப்­பிட்­டது.