உலகிலேயே ஆக அதிநவீன அம்சங்களைக் கொண்ட நான்கு 'எஃப்-35பி' போர் விமானங்கள், இன்னும் நான்கு ஆண்டுகளில் சிங்கப்பூர் குடியரசின் ஆகாயப்படையில் ஓர் அங்கமாகிவிடும்.
ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களாக விளங்கும் இவை, 1998ஆம் ஆண்டுமுதல் ஆகாயப்படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் தற்போதைய பழைய 'எஃப்-16' விமானங்களுக்குப் பதிலாகக் கொண்டுவரப்படும்.
சிங்கப்பூர் உள்பட தற்போது 16 நாடுகள் இவ்வகை போர் விமானங்களைக் கையகப்படுத்திக்கொள்ளும் நிலையில் உள்ளன.
குறுகிய ஓடுபாதையிலிருந்து கிளம்புவது, செங்குத்தாகத் தரையிறங்குவது போன்ற அம்சங்கள் இருப்பதால் 'எஃப்-35பி' வகையை சிங்கப்பூர் தேர்வுசெய்ததாகக் கூறப்படுகிறது.
படம்: சாவ்பாவ்

