சுங்கவரி தொடர்பில் தனக்குச் சிறப்புச் சலுகை கிடைக்க வேண்டும் என்பதற்காக சிங்கப்பூர் நிரந்தரவாசியான 41 வயது சோலையப்பன் ராமநாதன், ஏற்றுமதிச் சான்றிதழ்களில் போலித் தகவல்கள் குறிப்பிட்டிருந்தார். கிட்டத்தட்ட $9.72 மில்லியன் மதிப்பிலான சரக்குகளுக்கான ஏற்றுமதி தொடர்பில் போலித் தகவல் தந்ததற்காக நேற்று அவருக்கு $558,000 அபராதம் விதிக்கப்பட்டது. உள்ளூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் பழைய உலோகங்களையும் மற்ற உலோகப் பொருள்களையும் சீனாவிலிருந்து கொண்டு வருவது, அவற்றை சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வது போன்றவற்றை அவரின் நிறுவனங்கள் கையாண்டு வந்தன.
அபராதம்: ஏற்றுமதி சான்றிதழ்களில் போலித் தகவல்
1 mins read
-

