உட்லண்ட்ஸ் விபத்து: பேருந்துடன் கார் மோதியதில் இருவர் மரணம்

உட்லண்ட்ஸ் விபத்து: பேருந்துடன் கார் மோதியதில் இருவர் மரணம்

1 mins read
c291ba2d-4d15-4f00-b536-cf7c94827001
படம்: லியன்ஹ சாவ்பாவ் -
Google News Preferred Icon

உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் இன்று (செப்டம்பர் 1) காலை டவர் டிரான்சிட் பேருந்துடன் கார் ஒன்று மோதியதில் 32 வயது கார் ஓட்டுநரும் பேருந்தில் இருந்த பயணி ஒருவரும் மரணம் அடைந்துள்ளனர்.

பேருந்து ஓட்டுநரும் 8 பயணிகளும் சிகிச்சைக்காக கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 53 வயது பெண் பயணி ஒருவரும் மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.

உட்லண்ட்ஸ் அவென்யூ 9, உட்லண்ட்ஸ் அவென்யூ 4 சாலை சந்திப்பில் ஏற்பட்ட விபத்து குறித்து காலை 6.10 மணிக்குத் தகவல் கிடைத்தது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

சாலை சந்திப்பில் வலது புறமாக திரும்பிக்கொண்டிருந்தபோது நேராக சென்றுகொண்டிருந்த மஞ்சள் நிற கார் ஒன்று பேருந்தில் மோதியது.

பேருந்தின் நடுப்பகுதியில் போதிய காரின் முன் பகுதி நொறுங்கிவிட்டது.

கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துவிட்டார் என குடிமைத் தற்காப்பு படையின் முதலுதவியாளர்கள் அறிவித்தனர்.