ஸ்டாண்டர்ட்-என்டியுசி மின்னிலக்க வங்கி: கணக்கு, கடனட்டை

ஸ்டாண்டர்ட்-என்டியுசி மின்னிலக்க வங்கி: கணக்கு, கடனட்டை

2 mins read
1040a6b5-e9ba-4189-82b5-f79d2099021b
-

ஸ்டாண்­டர்ட் சாட்­டர்ட் வங்­கி­யும் தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சும் (என்­டி­யுசி) தொடங்கி இருக்­கும் புதிய மின்­னி­லக்க வங்கி நேற்று வாடிக்­கை­யா­ளருக்குத் தன்­ மெய்­நி­கர் கத­வு­க­ளைத் திறந்­து­விட்­டது.

சேமிப்­புக் கணக்கு, கடன் அட்டை, குடும்ப விபத்து காப்­பு­று­திச் சேவை ஆகி­ய­வற்றை அந்த வங்கி வழங்­கும்.

'டிரஸ்ட் பேங்க்' எனப்­படும் அந்த மின்­னி­லக்க வங்­கி­யில் என்­டி­யுசி எண்­டர்­பிரைஸ் நிறு­வ­னத்­துக்கு 40% பங்கு இருக்கும். ஸ்டாண்­டர்ட் சாட்­டர்ட் வங்­கிக்கு 60% பங்கு இருக்­கும்.

அந்த வங்­கி­யில் பணத்­தைச் சேமிப் போருக்கு முதல் $50,000 தொகைக்கு ஆண்­டுக்கு 1.4% வட்டி கிடைக்­கும்.

டிரஸ்ட் பேங்க் வங்­கி­யில் சேமிப்புக் கணக்­குத் தொடங்­கி­னால், பற்று அட்டை கொடுக்­கப்­படும். அந்த அட்டை மூலம் என்­டி­யுசி உறுப்­பி­னர்­கள் 11% லிங்க்­பா­யிண்ட்ஸ் கழிவு­க­ளைப் பெற­லாம்.

மற்­ற­வர்­க­ளுக்கு இந்­தத் தள்­ளு­படி அதிகபட்­சம் 5% இருக்­கும்.

புதிய சேமிப்புக் கணக்­குத் தொடங்­கு­வோர், குறைந்­த­பட்­சமாக குறிப்­பிட்ட ஒரு தொகையைக் குறிப்­பிட்ட காலத்­திற்கு வைத்­தி­ருக்க வேண்­டும் என்ற நிபந்­தனை கிடை­யாது. கட்­ட­ணம் எதுவும் இராது.

இந்த மின்­னி­லக்க வங்கி என்­டி­யுசி உறுப்­பி­னர்­களுக்கு அதன் கடன் அட்டை பேரில் 21% லிங்க்­பா­யிண்ட்ஸ் கழி­வு­களைக் கொடுக்­கும். மற்­ற­வர்­க­ளுக்கு இந்த அளவு 15% ஆக இருக்­கும். இந்த மின்­னி­லக்க வங்­கி­யின் கடன் அட்­டை­யைப் பெறு­வோர், அதற்­காக வரு­டாந்­திர கட்­ட­ணம் எதை­யும் செலுத்த வேண்­டாம்.

வெளி­நா­டு­க­ளுக்கு பணம் அனுப்­பினால் கட்­ட­ணம் எது­வும் வசூ­லிக்­கப்­ப­டாது. என்­டி­யுசி இன்­கம் நிறு­வ­னத்­தின் குடும்ப விபத்து காப்­பு­றுதி திட்­டத்­தை­யும் இந்த வங்கி வழங்­கு­கிறது. இந்­தத் திட்­டத்­தில் சேர்ந்து பயன்­பெற மாத சந்தா 50 காசு.இதில் சேர்­வோர் முதல் இரண்டு மாதங்­களுக்­குச் சந்தா செலுத்த வேண்­டாம்.

இத­னி­டையே, புதிய வங்கி பற்றி கருத்து கூறிய அதன் தலைமை நிர்­வாகி, என்­டி­யு­சியை சார்ந்­த­வர்­களே இந்த வங்கி­யின் மூலா­தார வாடிக்­கை­யா­ளர்­க­ளாக இருப்­பார்­கள் என்­றார்.

வங்கி தொடக்க நிகழ்ச்­சி­யில் கலந்து­கொண்ட துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங், முதிய சிங்­கப்­பூரர்­க­ளுக்­குச் சேவை­யாற்ற டிரஸ்ட் பேங்க் திட்­ட­மி­டு­வ­தாகத் தெரி­வித்­தார்.

தொழில்­நுட்­பத்தை அதி­கம் நாடா­த­வர்­க­ளைக் கருத்தில்கொண்டு, வங்கி முறை­களை எளி­மைப்­படுத்தி அதன்­ மூலம் அத்தகையோருக்குச் சேவை­யாற்ற வங்கி திட்­ட­மி­டு­கிறது என்று அவர் கூறினார்.

வாடிக்­கை­யா­ளர்­க­ளின் தேவை­க­ளைச் சிறந்த முறை­யில் நிறை­வேற்றத் தோதாக புத்­தாக்க திட்­டங்­களைத் தொடங்க இந்த வங்கி கரு­து­வ­தா­க­வும் திரு வோங் குறிப்­பிட்­டார்.

கடன் வாங்­கும் தொகையை எப்­படி திருப்பிச் செலுத்­து­வது என்­பதை வாடிக்­கை­யா­ளர்­களே தேர்ந்­தெ­டுத்­துக்கொள்ள அனு­ம­திக்­கும் சிங்­கப்­பூ­ரின் முத­லா­வது கடன் அட்­டையை இந்த வங்­கியே கொடுக்­கிறது என்று அவர் குறிப்­பிட்­டார்.