$11.4 மில்லியன் 'டோட்டோ' பரிசு; ஒரே ஒருவருக்கு!

செப்டம்பர் 1ம் தேதிக்கான 'டோட்டோ' அதிர்‌ஷ்டக் குலுக்கில் முதல் பரிசாக வழங்கப்பட்ட $11.4 மில்லியனை ஒரே ஒரு அதிர்‌ஷ்டசாலி வென்றுள்ளார்.

சாங்கி வில்லேஜ் சியர்ஸ் கடையில் 'குவிக்பிக் சிஸ்டம் 7' முறையில் எடுக்கப்பட்ட எண்ணுக்கு இந்த முதல் பரிசு கிடைத்துள்ளது.

'குவிக்பிக்' என்பது கணினியால் தானியக்க முறையில் டோட்டோ எண்கள் கொடுக்கப்படும். ஒவ்வொரு 'சிஸ்டம் 7' எண்ணும் $7 விலையில் விற்கப்படுகிறது.

வெற்றி பெற்றவர் எத்தனை 'குவிக்பிக்' எண்களை வாங்கினார் என்பது தெரியவில்லை.

வெற்றி பெற்ற எண்கள் 1, 18, 28, 42, 43, 48, உபரி எண் 45

இந்த எண்ணுக்கு மொத்தம் $ 11,414,547 பரிசுத்தொகை கிடைத்துள்ளது.

குரூப் 2 பரிசை ஆறு பேர் பகிர்ந்துகொண்டனர். ஒவ்வொருவரும் $200,000 பரிசுத்தொகையை வென்றனர்.

ஒரு பரிசுச்சீட்டு சிம் லிம் ஸ்குவேரில் உள்ள சிங்கப்பூர் பூல்ஸ் கிளையில் வாங்கப்பட்டது. மற்றொன்று 'தி பென்கூலன்' அருகே உள்ள இன்னொரு கிளையில் வாங்கப்பட்டது.

இரண்டு வெற்றிச்சீட்டுகள் இணையம்வழி வாங்கப்பட்டன. ஒன்று சிஸ்டம் 7. மற்றொன்று சிஸ்டம் 9. சிஸ்டம் 9 பரிசுச்சீட்டு ஒன்று $84க்கு விற்கப்படுகிறது.

இறுதி இரண்டு வெற்றிச் சீட்டுகள் டாசன் ரோடு என்டியிசியிலும் ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள கிளைகளிலும் வாங்கப்பட்டன.

பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் பரிசுகளைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றால் பரிசுத்தொலை டோட் கழகம் நிர்வகிக்கும் நன்கொடை அமைப்புகளுக்குக் கொடுக்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!