பாட்டாளிக் கட்சி, அதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் குறித்து கட்சி உறுப்பினர் டேனியல் கோ வெளியிட்ட கருத்துகளை விசாரிக்க ஒழுங்குநடவடிக்கைக் குழுவை அமைத்துள்ளது.
திருவாட்டி கான் விவகாரத்தை பாட்டாளிக் கட்சி கையாண்ட விதத்தை இணைப் பேராசிரியர் கோ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் விமர்சித்திருந்தார்.
அவர் பதிவுகளுக்கான காரணம் பற்றி விளக்கம் தர கட்சி தம்மை நேர்காணலுக்கு அழைத்துள்ளதாகவும் அதற்குச் செல்ல மறுத்துவிட்டதாகவும் அவர் கூறினார். முன்னாள் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினரான இணைப் பேராசிரியர் இதை நேற்றுமுன்தினம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
பாட்டளிக் கட்சியிலிருந்து விலகும் எண்ணம் இல்லை என்று அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் ேநற்று கூறினார்.