தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'கொவிட்-19 சூழல் இதை வலியுறுத்தியது'

2 mins read
81cf1611-006c-4c14-9546-0442865d521b
-

அதிபர் ஹலிமா: விருப்பத்தாலும் மனவுறுதியாலுமே ஒன்றிணைந்த சமுதாயம் மலர்கிறது

ஒன்­றி­ணைந்த சமு­தா­யங்­கள் தானாக உரு­வாவதில்லை; விருப்பத்தாலும் மன­வுறு­தி­யா­லும் மட்­டுமே அத்த­கைய சமு­தா­யம் மலர்கிறது என்று அதி­பர் ஹலிமா யாக்­கோப் கூறி­யுள்­ளார். கொவிட்-19 கொள்­ளை­நோய்ப் பர­வல் இதை மறு­வு­று­திப்­ப­டுத்­தி­ய­தாக அவர் குறிப்­பிட்­டார்.

சமயம், அடை­யா­ளம், ஒன்­றி­ணைந்த சமு­தா­யம் ஆகி­ய­வற்­றின் தொடர்­பில் நடை­பெ­றும் மூன்று நாள் மாநாட்­டின் தொடக்க நிகழ்ச்சி­யில் பேசி­ய­போது திரு­வாட்டி ஹலிமா இவ்­வாறு சொன்­னார். கிரு­மிப் பர­வலை முறி­ய­டிக்க செயல்­ப­டுத்­தப்­பட்ட பொதுச் சுகா­தாரக் கட்­டுப்­பா­டு­கள் சமூக அள­வில் 'என்­சை­யட்டி' எனப்­படும் மனக்­க­வ­லையை அதி­க­ரித்­த­தாக அவர் சுட்­டி­னார்.

அதைத் தொடர்ந்து பதற்­றம் மோச­ம­டைந்­த­தோடு சில வேளை­களில் இன ரீதி­யான தவ­றான கருத்­து­கள் தலை­தூக்­கி­ய­தைத் திரு­வாட்டி ஹலிமா குறிப்­பிட்­டார்.

கிருமி பர­வி­ய­தற்கு ஆசி­யர்­களே கார­ணம் என்ற கருத்து நில­வி­யதால் சில இடங்­களில் அவர்­களுக்கு எதி­ரான குற்­றச்செயல்­கள் இடம்­பெற்­றன. மேலும், தடுப்­பூ­சித் திட்­டங்­கள் போன்­றவை விவா­திக்­கப்­பட்­டன.

"கொள்­ளை­நோய்ப் பர­வ­லி­லிருந்து விரை­வில் மீண்­டு­வர ஒன்று­பட்டு மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கை­களும் ஒத்­து­ழைப்­பும் தேவைப்­பட்ட வேளை­யில் உல­க­ள­வில் சமு­தா­யங்­களில் இருக்­கக்­கூடிய பிரி­வு­கள் மோச­ம­டைந்­தன," என்று அவர் சொன்­னார்.

"நமது ஒட்­டு­மொத்த பாது­காப்­பிற்கு ஒன்­றி­ணைந்த சமு­தா­யம் தேவை­யா­னது. மக்­களை ஒன்­று­சேர்க்­கும் சமூ­கப் பிணைப்பு இல்லா­விட்­டால் சமு­தா­யங்­கள் தழைப்­பது மட்­டு­மின்றி பிழைக்­கவே முடி­யா­மல் போய்­வி­டும்," என்று அவர் எச்­சரித்­தார்.

ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மையத்தில் நடை­பெ­றும் ஒன்­றிணைந்த சமு­தா­யங்­க­ளுக்­கான அனைத்­து­லக மாநாட்­டில் 40க்கும் அதி­க­மான நாடு­க­ளைச் சேர்ந்த சுமார் 800 பங்­கேற்­பா­ளர்­கள் இடம்­பெற்றுள்ளனர். கலா­சார, சமுக, இளையர்துறை அமைச்­சின் ஆத­ர­வு­டன் எஸ் ராஜ­ரத்­தி­னம் அனைத்­து­ல­க ஆய்வுக் கழகம், நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கம் ஆகி­யவை இணைந்து மாநாட்டிற்கு ஏற்­பாடு செய்­துள்­ளன.

இந்த மாநாடு 2019ஆம் ஆண்டுக்­குப் பிறகு முதன்­மு­றை­யாக நடை­பெ­று­கிறது. பங்­கேற்­பாளர்­களில் 40 விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மா­னோர் 40 வய­துக்கு உட்­பட்­ட­வர்­கள்.