தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆட்குறைப்பு செய்த ஃபுட்பாண்டா

2 mins read
63ea40ca-a93a-433d-80c7-3086a99b7fea
-

நிறுவனத்தின் 60 ஊழியர்கள் ஆட்குறைப்பு

உணவை விநி­யோகிக்­கும் ஃபுட்பாண்டா நிறு­வ­னம் சிங்­கப்­பூ­ரில் உள்ள அதன் 1,200 ஊழி­யர்­களில் ஐந்து விழுக்­காட்­டி­னரை ஆட்­கு­றைப்பு செய்­தி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது. சுமார் 60 ஊழி­யர்­கள் ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்டி­ருக்­க­லாம் என்று நம்­பப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் தனது வட்­டா­ரத் தலை­மை­ய­கத்­தைத் திறந்த இரண்டு மாதங்­க­ளி­லேயே நிறு­வ­னம் ஆட்­கு­றைப்­பில் ஈடுப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரைத் தள­மா­கக் கொண்டு இயங்­கும் ஊழி­யர்­கள் கடந்த வாரம் ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­ட­தாக 'டீல்ஸ்­தி­ரீட்­ஏ­ஷியா' எனும் இணை­யத்­த­ளம் தெரி­வித்­தது.

தனது தாய் நிறு­வ­ன­மான ஜெர்­ம­னி­யைச் சேர்ந்த 'டெலி­வரி ஹீரோ', வட்டி, வரி, சொத்து மதிப்­பி­ழப்பு போன்­ற­வற்­றைக் கணக்­கி­டும் முன்­னர் நிறு­வ­னத்­தின் அடிப்­படை செயல்­பா­டு­கள் லாபத்தை ஈட்­ட­வேண்­டும் என்ற தெளி­வான இலக்­கைக் கொண்டு உள்­ளது என்று ஃபுட்பாண்­டா­வின் பேச்­சா­ளர் ஊட­கங்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

இத­னால் போட்­டித்­தன்மையைக் காப்பதற்கு செல­வு­ களைக் குறைத்து லாபத்தை ஈட்ட வேண்­டிய அவ­சி­யம் உள்­ள­தாக பேச்­சா­ளர் கூறி­னார்.

வட்டி, வரி, சொத்து மதிப்­பி­ழப்பு போன்­ற­வற்­றைக் கணக்­கிடும் முன்­னர் ெடலி­வரி ஹீரோ­வின் சென்ற ஆண்­டின் இழப்பு 888.8 மில்லியன் அமெ­ரிக்க டால­ராக உயர்ந்­தது என்று அதன் ஆண்­ட­றிக்கை கூறி­யது.

இந்த ஆண்டு ஜூலை­யில் ஃபுட்பாண்டா சிங்­கப்­பூரை அதன் வட்­டார அலு­வ­ல­க­மா­க­வும் உலகளா­விய தொழில்­நுட்ப மைய­மா­க­வும் அறி­வித்­தது. ராபின்­சன் ரோட்­டில் அது அலு­வ­ல­கத்­தை­யும் திறந்­தது.

ஃபுட்பாண்டா ஆட்­கு­றைப்பு செய்­துள்ள வேளை­யில் சந்­தைப் படுத்­து­தல், ஊட­கத் துறை­களில் வேலைக்கு ஆள் தேடும் அதன் விளம்பரங்களைக் கண்டதாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறி­யது.

சிங்­கப்­பூ­ரு­டன், பிலிப்­பீன்ஸ், தாய்­லாந்து ஆகி­யவற்றில் வேலை பார்க்கும் ஊழி­யர்­களை நிறு­வ­னம் ஆள்­கு­றைப்பு செய்­துள்­ளது.