முதியவர்கள் விழுவதைத் தடுக்க உதவும் அணியும் இயந்திரம்

முதியவர்கள் விழுவதைத் தடுக்க உதவும் அணியும் இயந்திரம்

1 mins read
708f5961-148e-4363-9f9a-ecc9a7a97630
அணிபவர் விழுவதைத் தடுக்கும் இந்த இயந்திரத்தின் உயரம் ஒரு மீட்டர். இதன் எடை சுமார் 100 கிலோகிராம் ஆகும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கம், டான் டோக் செங் மருத்து­வ­மனை ஆகி­ய­வற்­றின் ஆய்­வா­ளர்­கள், குறிப்­பாக மூத்­தோர் விழு­வ­தைத் தடுக்­கும் இயந்­திர மனி­தனை உரு­வாக்­கி­யுள்­ள­னர்.

இந்த இயந்­தி­ரத்தை அவர்­கள் அணி­ய­வேண்­டும். முதியோர், பரா­ம­ரிப்­பா­ளர்­க­ளைச் சார்ந்­தி­ருப்­பதை இந்த இயந்­திர மனி­தன் குறைக்­கும் என்­றும் இது அவர்­கள் தன்­னிச்­சை­யாக வாழ்­வ­தற்கு உத­வும் என்­றும் கூறப்­பட்­டது.

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல் ­க­லைக்­க­ழ­கம், டான் டோக் செங் மருத்­து­வ­மனை, தேசிய இயந்­தி­ர­வி­யல் திட்­டம் ஆகிய மூன்­றும் கூட்­டாக நேற்று இதைத் தெரி­வித்­தன.

ஒரு­வ­ரின் அசை­வு­க­ளைக் கண்­கா­ணித்து அவர் சம­நிலை இழப்­பதை உட­ன­டி­யாக கண்­ட­றி­யும் உணர்­க­ரு­வி­கள் இயந்­திர மனி­தனுக்­குள் பொருத்­தப்­பட்­டுள்­ளன. பட்டை வாரை அணி­வ­தால் இயந்­தி­ரம் அவர் தடு­மாற்­றத்தை நிறுத்தி சம­நி­லைப் படுத்­தும்.

நடக்க சிர­மப்­ப­டு­வோ­ரும் தடு­மாற்­றம் உள்­ளோ­ரும் அமர்ந்­துள்ள நிலை­யி­லி­ருந்து பாது­காப்­பாக எழுந்து நிற்க இந்த இயந்­திர மனி­தன் உத­வும். இதே போல நிற்­ப­வர்­கள் உட்­கா­ர­வும் முடி­யும்.

நட­மா­டும் இயந்­திர சம­நி­லைத் துணைக் கருவி என்று இதற்­குப் பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. இயந்­தி­ரத்­தின் உய­ரம் ஒரு மீட்­டர்; அதன் அக­லம் 70 செண்­டி­மீட்­டர். இதன் எடை சுமார் 100 கிலோ­கி­ராம் ஆகும்.

இயந்­தி­ரத்­தின் பட்­டை­வாரை இடுப்­பில் அணிந்­து­கொள்­ள வேண்­டும். அணி­ப­வர் செல்­லும் இடத்­துக்கு இயந்­தி­ர­மும் செல்­லும். தேசிய இயந்­தி­ர­வி­யல் திட்­டத்­தின் கீழ் இயந்­தி­ரம் உரு­வாக்­கப்­பட்­டது.