நிர்வாணக் கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை அனுப்பிவைக்கச் சொல்லி தமது காதலியிடம் 25 வயது ஆடவர் ஒருவர் கேட்டபோது அந்தப் பெண் மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து தமது உயிரை மாய்த்துக்கொள்ளப்போவதாகவும் அப்பெண்ணை அடிக்கப் போவதாகவும் அல்லது தம்முடன் நெருக்கமாக இருந்தபோது எடுக்கப்பட்ட படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்போவதாகவும் அவர் மிரட்டினார்.
இதையடுத்து அந்தப் பெண் ஆடையில்லாமல் எடுத்த புகைப்படங்களை அந்த ஆடவரிடம் அனுப்பிவைத்தார். இந்நிலையில், அப்படங்கள் இனி தமக்கு திருப்தி அளிக்கவில்லை என்று 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் அப்பெண்ணிடம் அந்த ஆடவர் கூறினார்.
அப்பெண்ணின் தாயாரை ஆடையில்லால் புகைப்படம் எடுத்து அனுப்புமாறு அந்த 23 வயது பெண்ணிடம் அந்த ஆடவர் கூறினார்.
நெருக்கமாகர இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்போவதாக காதலியை மிரட்டியதற்காகவும் ஒருவர் ஆடையில்லாமல் இருக்கும்போது அவருக்குத் தெரியாமல் அவரைப் புகைப்படம் எடுக்க அப்பெண்ணைத் தூண்டியதற்காகவும் அந்த சிங்கப்பூர் ஆடவருக்கு 20 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தைக் காக்க அந்த ஆடவரின் பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மிரட்டல்களுக்குப் பயந்து அந்தப் பெண் அந்த ஆடவர் கேட்டுக்கொண்டபடி செய்ததாகத் தெரிதிவிக்கப்பட்டது தமது தாயார் குளித்த பின் வெளியே வந்தபோது அவருக்குத் தெரியாமல் அப்பெண் புகைப்படம் எடுத்தார்.
அதே ஆண்டில் தமது காதலியின் நிர்வாணப் படங்களை பணத்துக்காக அடையாளம் தெரியாத ஒருவருக்கு அந்த ஆடவர் அனுப்பிவைத்தார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் தேதியன்று அப்பெண் காவல்துறையில் புகார் செய்தார். ஆனால் தகவல் அறிந்த அந்த ஆடவர் அப்பெண்ணுக்கும் அவருக்கும் இடையிலான அனைத்து குறுஞ்செய்தி, நெருக்கமாக இருந்தபோது எடுக்கப்பட்ட படங்கள், ஒலிப்பதிவுகள் அனைத்தையும் நீக்கினார். அவற்றை காவல்துறையினரால் மீட்க முடியாமல்போனதை அடுத்து விசாரணை தடைபட்டது.
அந்த ஆடவரைவிட்டு அப்பெண் பிரிந்து சென்றுவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

