சமூக ஒற்றுமைக்கு இளம் தலைவர்கள் முக்கியம்

உள்­ளூர் சமய வழி­பாட்டு இடங்­களைப் பார்க்­கும் மெய்­நி­கர் சுற்­று­லாக்­கள், இசை மூலம் இனம், சம­யம் சார்ந்த சமூக கதை­க­ளைச் சொல்­லும் சம­யங்­க­ளுக்­கி­டை­யி­லான ­விழா, சம­யம் தொடர்­பான உரை­யா­டல்­க­ளுக்கு வழி­வகுக்­கும் சீட்­டுக்­கட்டு விளை­யாட்டு முத­லிய இளை­யர்­கள் முன்­னெ­டுக்­கும் திட்­டங்­கள் இளை­ய தலை­வர்­கள் மாநாட்­டில் எடுத்­து­ரைக்­கப்­பட்­டன.

இளம் உள்­ளூர் மற்­றும் அனைத்­து­லக தலை­வர்­கள் ஒன்று சேர்ந்து சமூக ஒற்­று­மை­யைப் பலப்­ப­டுத்­தும் வழி­களை ஆரா­யும் நிகழ்ச்­சி­தான் இளை­ய தலை­வர்­கள் மாநாடு.

கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்­சின் ஆத­ர­வில் எஸ். ராஜ­ரத்­தி­னம் அனைத்­து­லக ஆய்­வுக் கழ­கம் ஏற்­பாடு செய்­த ஒற்­று­மை­யான சமூ­கங்­க­ளுக்­கான அனைத்­து­லக மாநாட்­டின் ஓர் அங்­கம் இளை­ய தலை­வர்­கள் மாநாடு.

மாநாட்­டை முடித்­து­வைத்து பேசிய கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்­சர் எட்­லின் டோங், இளைய சமூக வெற்­றி­யா­ளர்­க­ளைக் கொண்ட ஒரு வலு­வான சமு­தா­யத்தை அமைக்­கும் அவ­சி­யம் ஏற்­பட்­டுள்­ளது என்­றார்.

செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று காணொளி வழி சிறப்­புரை ஆற்­றிய புனித வத்­தி­கன் நக­ரின் வெளி­யு­றவு அமைச்­சர் கார்­டி­னல் பியேட்ரோ பரோ­லி­னின் உரையை மேற்­கோள்காட்டி பேசிய திரு டோங், நீதி, சகோ­த­ரத்­து­வம், ஒற்­றுமை ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யா­கக்கொண்ட இளம் தலை­வர்­களை வளர்ப்­பது ஒரு மேம்­பட்ட சமூ­கத்­துக்கு ஆணி­வே­ராக இருக்­கும் என்­றார்.

இவ்­வாண்­டின் இளை­ய தலை­வர்­கள் மாநாட்­டில் 120 இளம் தலை­வர்­கள் பங்­கேற்­ற­னர்.

அவர்­கள் முன்­மொ­ழிந்த சில திட்­டங்­க­ளுக்கு கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்சு நிதி­யா­த­ரவு அளிக்­கும்.

மேலும் இளை­ய தலை­வர்­கள் மாநாட்­டின் முன்­னாள் உறுப்­பி­னர் சங்­கத்தை வளப்­ப­டுத்­து­வ­தற்­கும் மெய்­நி­கர் அள­வில் பங்­கா­ளித்­து­வத்தை மேம்­ப­டுத்தி அதன் மூலம் அனை­வ­ரும் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளக்­கூ­டிய வளத்தை உரு­வாக்­க­வும் அமைச்சு திட்­ட­மிட்­டுள்­ளது என்று தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!