சாலை விபத்துகளில் முதியோர் மரணம் அதிகரிப்பு

3 mins read
e495bebd-5037-461e-814b-cd4030317d67
-

சிங்­கப்­பூ­ரில் இவ்­வாண்­டின் முதல் ஆறு மாதங்­களில் சாலை விபத்து கார­ண­மாக மாண்­டோர் எண்­ணிக்கை குறைந்­த­போ­தி­லும் அதே கால­கட்­டத்­தில் சாலை விபத்­து­களில் சிக்கி மர­ண­ம­டைந்த முதி­யோர் எண்­ணிக்கை கிட்­டத்­தட்ட இரண்டு மடங்கு அதி­க­ரித்­

துள்­ளது.

கடந்த ஜன­வரி மாதத்­துக்­கும் ஜூன் மாதத்­துக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் நிகழ்ந்த 44 சாலை விபத்­து­களில் 45 பேர் மாண்­ட­னர்.

இந்­தத் தக­வலை காவல்­துறை நேற்று வெளி­யிட்­டது.

2021ஆம் ஆண்­டின் முதல் ஆறு மாதங்­களில் நிகழ்ந்த 52 சாலை விபத்­து­களில் பதி­வான 58 மர­ணங்­க­ளை­விட இது குறைவு.

இருப்­பி­னும், இவ்­வாண்­டின் முதல் ஆறு மாதங்­களில் காயங்­கள் ஏற்­ப­டுத்­திய சாலை விபத்­து­க­ளின் எண்­ணிக்கை கூடி­யது.

2021ஆம் ஆண்­டின் முதல் ஆறு மாதங்க­ளில் காயங்­களை ஏற்­ப­டுத்­திய 2,960 விபத்­து­கள் நிகழ்ந்­த­ன.

இவ்­வாண்­டின் முதல் ஆறு மாதங்­களில் அத்­த­கைய விபத்­து­

க­ளின் எண்­ணிக்கை 3,115ஆக அதி­க­ரித்­தது.

காயங்­கள், மர­ணங்­கள் ஆகி­ய­வற்றை ஏற்­ப­டுத்­திய சாலை விபத்து ­க­ளின் மொத்த எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்­துள்­ளது.

2021ஆம் ஆண்­டின் முதல் ஆறு மாதங்­களில் அத்­த­கைய சாலை விபத்­து­க­ளின் எண்­ணிக்கை 3,012ஆக இருந்­தது.

இவ்­வாண்­டின் முதல் ஆறு மாதங்­களில் அந்த எண்­ணிக்கை 3,159ஆக ஏற்­றம் கண்­டது.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட­தால் இவ்­வாண்­டின் முதல் ஆறு மாதங்­களில்

போக்­கு­வ­ரத்து அதி­க­ரித்­த­தா­கக் காவல்­துறை தெரி­வித்­தது.

கடந்த ஏப்­ரல் மாதத்­தில் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களை சிங்­கப்­பூர் தளர்த்­தி­யது.

அதன்­படி வேலை­யி­டத்­துக்­குத் திரும்ப ஊழி­யர்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது.

அது­மட்­டு­மல்­லாது, ஒரே நேரத்­தில் ஒன்­று­கூட விதிக்­கப்­பட்­டி­ருந்த அதி­க­பட்ச வரம்பு நீக்­கப்­பட்­டது.

அதற்கு முன்­ன­தாக ஒரே நேரத்­தில் அதி­க­பட்­ச­மாக 10 பேர் மட்­டுமே ஒன்­று­கூ­ட­லாம்.

இதற்­கி­டையே, சாலை விபத்­து­கள் கார­ண­மாக மர­ணம் அடைந்த முதி­யோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது.

2021ஆம் ஆண்­டின் முதல் ஆறு மாதங்­களில் ஐந்து முதி­ய­வர்­கள் சாலை விபத்­து­களில் மாண்­ட­னர்.

இவ்­வாண்­டின் முற்­ப­கு­தி­யில் ஒன்­பது முதி­ய­வர்­கள் சாலை

விபத்­து­களில் மாண்­ட­னர்.

அதே கால­கட்­டத்­தில் சாலை விபத்­து­களில் காய­முற்ற முதிய பாத­சா­ரி­க­ளின் எண்­ணிக்­கை­யும் 100லிருந்து 109ஆக அதி­க­ரித்­தது.

இவ்­வாண்­டின் முதல் ஆறு மாதங்­களில் சாலை விபத்து கார­ண­மாக மாண்ட பாத­சா­ரி­களில் 81.8 விழுக்­காட்­டி­னர் முதி­யோர் எனக் காவல்­துறை தெரி­வித்­தது.முதி­யோ­ரு­டன் தொடர்­பு­டைய சாலை விபத்­து­களில் 45.3 விழுக்­காடு விபத்­து­கள், விதி­க­ளுக்­குப் புறம்­பாக சாலை­க­ளைக் கடந்­த­தால் ஏற்­பட்­டவை என்று காவல்­துறை கூறி­யது.

"சாலை­க­ளைக் கடக்க மேம்­பா­லங்­கள், போக்­கு­வ­ரத்து

விளக்­கு­கள் போன்ற சாலை விதி­க­ளுக்கு உட்­பட்ட முறை­க­ளைக் கடைப்­பி­டிக்­கு­மாறு முதி­யோ­ரைக் கேட்­டுக்­கொள்­கி­றோம்," என்று காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், மது­பா­னம்

அருந்­தி­விட்டு வாக­னம் ஓட்­டிய குற்­றத்­துக்­காக கைது செய்­யப்­பட்­டோர் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்­துள்­ளது.

இக்­குற்­றத்­தைப் புரிந்­த­தற்­காக கடந்த ஆண்­டின் முதல் ஆறு மாதங்­களில் 741 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

அதே குற்­றத்­துக்­காக இவ்­வாண்­டின் முதல் ஆறு மாதங்­களில் 793 பேர் பிடி­பட்­ட­னர்.

இருப்­பி­னும், மது­பா­னம்

அருந்­தி­விட்டு வாக­னம் ஓட்­டி­ய­வர்­க­ளால் ஏற்­பட்ட சாலை விபத்­து­க­ளின் எண்­ணிக்கை ஒன்­பது விழுக்­காடு குறைந்­தது.

கடந்த ஆண்­டின் முதல் ஆறு மாதங்­களில் 78 விபத்­து­கள் பதி­வா­கின.

அந்த எண்­ணிக்கை இவ்­வாண்­டின் முதல் ஆறு மாதங்­களில் 71ஆகக் குறைந்­தது.

இது ஒரு­பு­றம் இருக்க, வேக வரம்பை மீறி வாக­னம் ஓட்­டு­வோ­ரின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்­துள்­ளது. கடந்த ஆண்­டின் முதல் ஆறு மாதங்­களில் 66,480 பேர் இந்த விதி­மீ­ற­லில் ஈடு­பட்­ட­னர்.

இவ்­வாண்­டின் முதல் ஆறு மாதங்­களில் இந்த எண்­ணிக்கை 69,291ஆக அதி­க­ரித்­தது.

வேக வரம்பை மீறி வாக­னம் ஓட்­டி­ய­தால் ஏற்­பட்ட விபத்­து­க­ளின் எண்­ணிக்­கை­யும் 474லிருந்து 487ஆக அதி­க­ரித்­தது.

போக்குவரத்து விளக்கு சிவப்பு நிறமாக மாறியும் வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டிச் செல்லும் விதிமீறல் இவ்வாண்டின் முற்பகுதியில் குறைந்துள்ளது.